‘எல்லாமே சரியாகிடும்’; சமந்தாவுக்கு என்னாச்சு.. திடீரென போட்ட பதிவால் கலங்கிப் போன ரசிகர்கள்!!
Author: Babu Lakshmanan3 February 2023, 8:02 pm
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் அண்மையில் மயோசிடிஸ் எனும் அரிய வகை தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டார். இது குறித்து உருக்கமாக சமூகவலைதளத்திலும் கருத்து பதிவிட்டிருந்தார். இதனை பார்த்த பிரபலங்கள் பலரும் சமந்தாவுக்கு ஆறுதல் கூறி வந்தனர்.
இதையடுத்து, ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சமந்தா, பின்னர், வெளிநாட்டில் மேல்சிகிச்சை பெற்றார். ஹைதராபாத்தில் உள்ள பிரபல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சமந்தா, தன்னால் முடிந்தவரை படங்களின் போஸ்ட் புரடெக்ஷன் மற்றும் புரமோஷன் பணிகளில் பங்கேற்று வந்தார்.
சமந்தா நடித்துள்ள ஷாகுந்தலம் படம் வரும் 11ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது. இதற்கான புரமோஷன்கள் ஒரு புறம் இருந்தாலும், தற்போது ஹாலிவுட் வெப் சீரிஸின் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார் நடிகை சமந்தா.
இந்நிலையில் நடிகை சமந்தா ஜனவரி மாதத்தில் தான் செய்தவற்றை புகைப்படங்களாக அவர் பதிவிட்டுள்ளார். ஹாலிவுட் டீம்முடனான டிஸ்கஷன், படுக்கையில் ஓய்வு, படப்பிடிப்பு, ஜிம்மில் வொர்க் அவுட், சோக முகம் என பல வகை போட்டோக்களை ஷேர் செய்துள்ளார்.
இறுதியாக, தனக்குத்தானே ஆறுதல் சொல்வது போன்று, ஆழமாக மூச்சு விடு பாப்பா.. எல்லாம் சரியாகி விடும், கடந்த 7, 8 மாதங்கள் மோசமானதாக இருந்தது.
அதை எப்போதும் மறக்காதே. நீ எப்படி அதில் இருந்து வெளியே வந்தாய் என்பதை நினைவில் கொள். நீ யோசிப்பதை நிறுத்திவிட்டாய், உன்னையே நீ திசை திருப்பி விட்டாய்.
மற்றவர்களுக்கு முன் ஒரு அடி முன்னால் நடந்தாய், வேலையை முடித்தாய். நீ எப்படி செய்தாய் என்பதை நம்ப முடியவில்லை. நான் உன்னைப் பற்றி வெறித்தனமாக பெருமைப்படுகிறேன். நீயும் உன்னைப்பற்றி பெருமைப்பட வேண்டும். நீ ஸ்ட்ராங்… என பதிவிட்டு தன்னைத்தானே பெருமையாக பேசி தேற்றியுள்ளார் சமந்தா.
சமந்தாவின் இந்த பதிவை பார்த்த ரசிகர்களும் ஸ்டே ஸ்ட்ராங் என்று அவருக்கு ஆதரவாக கூறி வருகின்றனர்.