மாநாடு படத்தில் எஸ். ஜே சூர்யா சொல்வது போல், சமந்தா வந்தார், நடித்தார், முதலிடத்தை பிடித்தார், முதலிடத்தில் இருக்கிறார், Repeatu. இந்த வளர்ச்சி எப்போது நடந்தது திட்டவட்டமாகத் தெரியவில்லை. எந்தப் படத்தின் மூலம் இவருக்கான அங்கீகாரம் இவ்வளவு தூரம் கிடைத்தது என்றும் தெரியவில்லை.

ஆனால் காத்துவாக்குல இரண்டு காதல் படம் ரிலீஸான பிறகு சென்னை முழுக்க கதீஜா பற்றிய பேச்சுதான். 2010- ல் மாஸ்கோவின் காவேரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா. பாணா காத்தாடி, நீதானே என் பொன்வசந்தம், நான் ஈ, கத்தி, 24, மெர்சல், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களின் மூலம் பக்கத்து வீட்டு பெண் போல நடித்து இன்றளவும் கனவுக்கன்னியாக வலம் வருகிறார்.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இந்நிலையில், தற்போது சம்மு குட்டி விஜய்சேதுபதியுடன், “காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தில் இவரின் நடிப்புக்கு ஏகப்பட்ட பாராட்டுக்கள்.பின் 2017 ஆம் ஆண்டு இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார்.

சில மாதங்களுக்கு முன், இருவரும் தன்னுடைய விவாகரத்தை அறிவித்தனர். இந்த நிலையில் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதவிட்டு இளசுகளை சுண்டி இழுத்து வருகிறார்.
தற்போது, குஷி, சிடடெல் போன்ற படங்களின் ஷூட் முடிந்தப்பின் முழு சிகிச்சை மேற்கொள்ள வெளிநாட்டுக்கு செல்லவுள்ளார். தற்போது ஆன்மீக பயணத்தை மேற்கொள்ள இந்தோனேசியா சுற்றியிருக்கும் பாலி, Uluwatu போன்ற இடங்களுக்கு சென்று க்யூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் தன் பக்க ஈர்த்து வந்தார் சமந்தா.
தற்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட சமந்தா குறித்து ரசிகர்கள் லூசா இருந்தாலும் லேசா இருக்கு என்று கமெண்ட்களை செய்து வருகின்றனர்.
