உயிருக்கு போராடிய 1 வருடம்…. கடவுள் இருக்கிறார் – சமந்தா உருக்கமான பதிவு!

Author: Shree
17 June 2023, 8:50 am

தெந்திய சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா தமிழில் மாஸ்கோவின் காவிரி படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து விண்ணைத்தாண்டி வருவாயா, நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம் , கத்தி , தெறி சூப்பர் டீலக்ஸ் என பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார். இதனிடையே தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்னரும் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்த சமந்தா மிகவும் மோசமான படுக்கையறை காட்சிகளில் நடித்து முகம் சுளிக்க வைத்தார். இதனை நாகசைதன்யா எச்சரிக்க அவரை விவாகரத்து செய்துவிட்டார். விவாகரத்துக்கு பின்னர் தொடர்ந்து கிளாமர் காட்சிகள் அடங்கிய படங்களில் தாராளமாக நடித்து வருகிறார்.

இதனிடையே அவர் மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டு ஓராண்டுகள் சிகிச்சை எடுத்து பின்னர் குணமானார். நோய் தொற்று பாதிக்கப்பட்டு ஓராண்டு ஆனதை நினைவுகூர்ந்துள்ள சமந்தா அது குறித்து உருக்கமான பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில், நான் நோய்வாய்ப்பட்டு ஒரு வருடம் ஆகிறது. எனது சினிமா வாழ்க்கையிலும் பல தோல்விகள். அது வாழ்க்கையை இன்னும் சுவாரசியமாக மாற்றியது. இந்த ஒரு வருடத்தில் நிறைய பிரார்த்தனைகள், பூஜைகள் செய்தேன். ஆசிர்வாதங்களையும், பரிசுகளையும் கேட்டு அல்ல, வலிமையையும், அமைதியையும் கொடுக்க வேண்டினேன். எதுவும் நாம் நினைத்தது போல் நடக்காது என்பதை இந்த ஒரு வருட காலம் எனக்கு உணர்த்தியது. என்று குறிப்பிட்டுள்ளார்.

  • Captain Vijayakanth first death anniversaryகேப்டன் விஜயகாந்த் நினைவு நாள்…கண் கலங்கிய சினிமா பிரபலங்கள்..!
  • Views: - 392

    0

    0