அட கடவுளே.. சமந்தா முகம் இப்டி ஆயிருச்சு..? போட்டோ பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி..!

Author: Udayachandran RadhaKrishnan
31 January 2023, 12:15 pm

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான தெலுங்கில் Ye Maaya Chesave மற்றும் தமிழில் விண்ணைதாண்டி வருவாயா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சமந்தா. இதற்கு முன்னர், கல்லூரி படிப்பை முடித்தவுடன் மாடலிங் மற்றும் சில முக்கிய விளம்பரங்களிலும் நடித்து வந்தார்.

samantha - updatenews360

2010ம் ஆண்டு, அதர்வா ஜோடியாக பானா காத்தாடி திரைப்படத்தில் நடித்த இவர், இதன் பின்னர், நிறைய தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம் போன்ற திரைப்படங்கள் மூலம் தமிழில் நல்ல ரசிகர்கள் கூட்டத்தை பெற்றார். இதன் மூலம், அடுத்தடுத்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் டாப் ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்று, தென்னிந்திய திரையுலகில் தவிர்க்க முடியாத இடத்தை பெற்றார். கடைசியாக தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து இருந்தார்.

samantha-updatenews360

சமீபத்தில் சமந்தா நடித்த யசோதா திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தெலுங்கில் ‘ஷகுந்தலம்’, ‘குஷி’ படங்களில் தற்போது நடித்து வருகிறார். மையோசிட்டிஸ் என்ற நோயால் அவதிப்பட்டு வரும் சமந்தா, தற்போது அதற்கு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். சிகிச்சையின் மூலம் அவரது உடல்நிலை தற்போது தேறி வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில், நீண்ட இடைவெளிக்கு பின்னர் சமந்தா, ஒர்கவுட் செய்யும் வீடியோ வெளியானது.

இதனை பார்த்து சந்தோஷத்தில் இருந்த ரசிகர்களுக்கு தற்போது அவருடைய புகைப்படம் அதிர்ச்சியை தந்துள்ளது. அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் அவரின் முகம் முழுமையாக மாறி இருப்பதை காண முடிகிறது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • SAWADEEKA song meaning அட”SAWADEEKA”அர்த்தம் இதுதானா…பங்கம் செய்துள்ள அனிருத்…செம VIBE-ல் அஜித் ரசிகர்கள்..!
  • Views: - 501

    2

    0