காதல் கணவருடன் மீண்டும் சேரும் வாய்ப்பை இழந்தாரா சமந்தா.?

Author: Rajesh
25 January 2022, 12:33 pm

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை சமந்தா, தன் கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்தது திரையுலகில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான புஷ்பா திரைப்படத்தில் ஓ சொல்றியா மாமா பாடலில் அவர் ஆடிய அந்த கிளாமர் டான்ஸ் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து சமந்தா மீண்டும் ஒரு திரைப்படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Samantha -Updatenews360

இதனிடையே கடந்த இரண்டு தினங்களுக்கு முன் நடிகை சமந்தா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்த விவாகரத்து குறித்த பதிவை நீக்கினார். இதனையடுத்து நாகசைதன்யா மற்றும் சமந்தா இருவரும் மீண்டும் இணைவர்கள் என்ற தகவல் வெளியாகியது.

இந்த நிலையில், சமந்தா ஹாலிவுட்டில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படத்தில் சமந்தா இரு பாலின ஈர்ப்பு உடையவராக நடிக்க இருக்கிறார்.
ஏற்கனவே இவர் அதிக கவர்ச்சியாக ஃபேமிலி மேன் வெப் சீரிஸில் நடித்ததே விவாகரத்துக்கு காரணமாக சொல்லப்பட்டது. இந்நிலையில் சமந்தா மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தும் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதால் மீண்டும் இணைய வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது.

  • srikanth tells about the incident when he was watching dragon movie டிராகன் படத்துக்கு போனேன், கடுப்பேத்திட்டாங்க- ஆதங்கத்தை கொட்டிய நடிகர் ஸ்ரீகாந்த்…