தமிழ். தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் நடிகை சமந்தா. தற்போது, நடிகர் விஜய்சேதுபதியுடன் காத்துவாக்குல ரெண்டு காதல்இ யசோதா போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இதுமட்டுமின்றி சமீபத்தில் வெளிவந்த புஷ்பா படத்தில் இவர் நடனம் ஆடியிருந்தார். அந்த நடனம் பட்தொட்டி எங்கும் எதிரொலித்து கொண்டு வருகிறது. அந்த அளவிற்கு கவர்ச்சி குத்தாட்டம் ஆடியிருந்தார்.
நடிகர் நாக சைதன்யாவை விட்டு பிரிந்ததற்கு பிறகு, கவர்ச்சியான புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார்.
இதனிடையே, மவுனமாக இருந்து வந்த, நாக சைதன்யா தனியார் தொலைக்காட்சியில், எங்களது பிரிவு, அவரவர்களின் சொந்த நலனுக்காக எடுக்கப்பட்டது தான் என தெரிவித்தார்.
மேலும், இந்த பிரிவு சமந்தாவுக்கு மகிழ்ச்சி என்றால், எனக்கும் மகிழ்ச்சியே என தெரிவித்த அவர், சினிமாவில் தனக்கு பொருத்தமான ஜோடி சமந்தாதான் என நாக சைதன்யா கூறியிருந்தார்.
இந்நிலையில் நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்த விவாகரத்து தொடர்பான பதிவை தற்போது நீக்கியுள்ளார். இதனால் இருவரும் மீண்டும் இணைவார்களா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.