என் கதை தெரியனுமா..? பிகினியில் போட்டோ வெளியிட்டு ரசிகர்களுக்கு நடிகை சமந்தா வெளியிட்ட அறிவிப்பு..!
Author: Vignesh9 November 2023, 2:49 pm
அழகுன்னா அழகு அப்படி ஒரு அழகு தமிழ் பெண்ணாக பவ்யமான தோற்றத்தோடு மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சினிமா உலகில் உச்சத்தை தொட்டவர் நடிகை சமந்தா. சமந்தா சென்னை பல்லாவரத்து பெண் என்பதே பலரால் நம்ப முடியாத உண்மை. இவர் அப்பா தெலுங்கு, அம்மா மலையாளி. ஆனால் தான் பிறந்து வளர்ந்ததெல்லாம் தமிழ் நாட்டில் என்பதால், தென்னிந்திய கலவையாக மிளிரும் சமந்தா ஆரம்பத்தில் மாடலிங் பெண்ணாக ரூ. 100 ரூ. 200க்கெல்லாம் கடைகளில் வெல்கம் கேர்ளாக பணியாற்றி இருக்கிறார்.
தமிழில் மாஸ்கோவின் காவிரி படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து விண்ணைத்தாண்டி வருவாயா, நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம் , கத்தி , தெறி சூப்பர் டீலக்ஸ் என பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார். இதனிடையே தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின்னரும் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்த சமந்தா மிகவும் மோசமான படுக்கையறை காட்சிகளில் நடித்து முகம் சுளிக்க வைத்தார். இதனை நாகசைதன்யா எச்சரிக்க அவரை விவாகரத்து செய்துவிட்டார். விவாகரத்துக்கு பின்னர் தொடர்ந்து இருவரும் நடித்து வருகிறார்கள். இதனிடையே சமந்தா மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துவந்தார்.
மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள சமந்தா அதற்கான சிகிச்சைகள் தற்போது எடுத்து வருகிறார். இந்த சிகிச்சைக்காகவே ஆறு மாத கால அளவில் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்டார். சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று ஹைதராபாத் திரும்பிய இவர் பூடானில் நண்பர்களுடன் ரிலாக்ஸாக சுற்றுலா சென்று வந்தார்.
இது மட்டுமில்லாமல் பல பிராண்டுகளுக்கும் இவர் மாடனின் செய்து வருகிறார். இந்த நிலை மாடலிங் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய சமந்தா மனம் திறந்து பேசியுள்ளார். அதில், நான் என் கல்லூரி காலகட்டத்தில் இருந்து மாடலிங் செய்து வந்தாலும், படிப்பின் மீது தொடர்ந்து கவனம் செலுத்தினேன். படிக்கும் காலத்தில் நடிகையாக வேண்டும் என்கிற ஐடியாவே என்னிடம் இல்லை. மாடலிங் துறையில் வந்த பின்னர் தான் நடிக்க வேண்டும் என்கிற எண்ணம் எனக்குள் இருந்தது.
அது கடினமான காலமாக இருந்தது. தொடர்ந்து படிக்க முடியவில்லை, வீட்டில் நிலமையும் சரி இல்லை. என்ன செய்வதென்றே தெரியாமல் இருந்தேன். மாடலிங்துறையில், நுழைந்த பின்னர் தான் ஒரு ஐடியா கிடைத்தது. நடிகையாக வேண்டும் என்பதற்காகவே இந்த இலக்கை வைத்திருந்தேன். மாடலிங் துறையில் நான் எதையும் எடுத்துக் கொள்ள விரும்பவில்லை. அப்படி செய்திருந்தால் நான் பேரழிவை சந்தித்திருப்பேன். நான் மாடலிங்கை தொடங்கும் போது மோசமாக இருந்தது. டிவியில் நான் நடித்த விளம்பரம் வந்தாலே ஓடி சென்று டிவியை மாற்றிவிடுவேன் அந்த அளவுக்கு கிரின்ச் மனநிலையில் தான் இருந்தேன் என்று சமந்தா பேசியுள்ளார்.