எல்லாத்துலயும் டாப் தான் புடிக்குமா : இப்படி பண்ணி வெச்சுருக்கீங்க… கசிந்தது சமந்தாவின் ரகசியம்..!

Author: Rajesh
1 August 2022, 11:58 am

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. கவுதம் மேனனின் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, நீதானே எந்தன் பொன்வசந்தம், நான் ஈ, கத்தி, தெறி, அஞ்சான், 24, மெர்சல் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார்.

தெலுங்கு மொழி திரையுலகிலும் அனைத்து முன்னணி தெலுங்கு நடிகர்களுடனும் நடித்துள்ளார். ஒரு சில படங்களில் ஒன்றாக நடித்ததன் மூலம் ஏற்பட்ட காதலால் நாகார்ஜுனா மற்றும் அமலா அவர்களின் மூத்த மகனான நடிகர் நாகசைதன்யா அவர்களை திருமணம் செய்து கொண்டார். 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர்கள், ஸ்வீட் ஜோடியாக வலம் வந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக சில நாட்களுக்கு முன் இருவரும் சுமூகமாக பிரிந்து விட்டனர்.

இறுதியாக காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திற்கு பிறகு விஜய் தேவரகொண்டாவின் குஷி, சகுந்தலம், யசோதா போன்ற படங்களில் நடித்து வருகிறார். பாலிவுட்டில் கரண் ஜோகர் தயாரிப்பில் அக்‌ஷய்குமார் நடிக்கும் ஒரு படத்தில் கமிட்டாகி இருக்கிறார் சமந்தா.

இவரின் 10ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பில் சமந்தா எடுத்த மதிப்பெண்ணின் மார்க் ஷீட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிப்பில் சிறந்து விளங்கி வரும் சமந்தா, படிப்பிலும் சிறந்த மதிப்பெண்களை எடுத்துள்ளார்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 851

    4

    0