சமந்தா எடுத்த ரிஸ்க்.. 30 கிலோ எடையுள்ள புடவை 3 கோடி மதிப்புள்ள நகைகள் அணிந்த சமந்தா: ரசிகர்களை ஷாக் செய்த போட்டோ இதோ..!

Author: Rajesh
2 February 2023, 6:15 pm

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான தெலுங்கில் Ye Maaya Chesave மற்றும் தமிழில் விண்ணைதாண்டி வருவாயா திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சமந்தா. இதற்கு முன்னர், கல்லூரி படிப்பை முடித்தவுடன் மாடலிங் மற்றும் சில முக்கிய விளம்பரங்களிலும் நடித்து வந்தார்.

samantha - updatenews360

2010ம் ஆண்டு, அதர்வா ஜோடியாக பானா காத்தாடி திரைப்படத்தில் நடித்த இவர், இதன் பின்னர், நிறைய தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இதன் மூலம், அடுத்தடுத்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் டாப் ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்று, தென்னிந்திய திரையுலகில் தவிர்க்க முடியாத இடத்தை பெற்றார். கடைசியாக தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து இருந்தார். மையோசிட்டிஸ் என்ற நோயால் அவதிப்பட்டு வரும் சமந்தா, தற்போது அதற்கு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.

சிகிச்சையின் மூலம் அவரது உடல்நிலை தற்போது தேறி வருவதாக கூறப்படுகிறது. தெலுங்கில் ‘ஷகுந்தலம்’, ‘குஷி’ படங்களில் தற்போது நடித்து வருகிறார். புராண கதையாக சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள சகுந்தலம் திரைப்படம் வரும் பிப்ரவரி 17ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் டீசரில், சமந்தாவின் தோற்றம் மற்றும் நடிப்பு, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது.

samantha - updatenews360

இந்நிலையில், இப்படம் குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்று சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது. வசுந்தரா டைமண்ட் நிறுவனம் உருவாக்கிய 3 கோடி மதிப்புள்ள ஆபரணங்களை சமந்தா ‘சகுந்தலம்’ படத்தில் அணிந்து நடித்திருந்ததாகவும், உயர் ரக கற்கள் பதிக்கப்பட்ட சுமார் 30 கிலோ புடவை அணிந்து ஒரு வாரம் சமந்தா நடித்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியாத நிலையில், இது குறித்த புகைப்படம் ஒன்றும் சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகிறது.

  • Sikandar movie teaser release ஏ.ஆர்.முருகதாஸின் தரமான சம்பவம் LOADING…மிரட்டலாக வெளிவந்த சல்மான் கானின்”சிக்கந்தர்”பட டீஸர்..!
  • Views: - 445

    7

    0