மலையாள திரைப்படங்களில் அதிகம் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனவர் நடிகை சம்யுக்தா மேனன். இவர் முதன்முதலாக 2015 இல் பாப்கார்ன் என்ற திரைப்படத்தில் மலையாளத்தில் நடித்துள்ளார். 2018ல் வெளிவந்த தீவண்டி திரைப்படத்தில் நடித்தமைக்காக புகழப்பட்டார்.
தமிழில் 2018-ம் ஆண்டு “களரி” திரைப்படத்தில் நடித்து கோலிவுட்டில் அறிமுகமானார் நடிகை சம்யுக்தா மேனன். அப்படத்தில் இவர் நடிகர் கிருஷ்ணாவின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.மேலும் தெலுங்கில் பீமா நாயக் படத்தில் நாயகியாக நடித்துள்ளார். தொடர்ந்து அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்க தெலுங்கில் பிரபல நடிகையாக வலம் வரத்துவங்கி அங்கு ராசியான நடிகையாக பெயர் எடுத்தார்.
அதன் பிறகு தான் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த சம்யுக்தா மேனன் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி திரைப்படத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதோடு அம்மணி படுபேமஸ் ஆகிவிட்டார். ரசிகர்கள் கூட்டமும் அதிகரித்துவிட்டது.
இந்நிலையில் சம்யுக்தாவின் ரசிகர்களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. ஆம், சம்யுக்தா மேனன் விரைவில் திருமணம் செய்துக்கொள்ளவிருக்கிறாராம் . இவர் தனது நண்பர் ஒருவரை நீண்ட நாட்களாக காதலித்து வருகிறாராம். இந்த வருடம் அவரை கரம் பிடிக்க உள்ளாராம். விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.