நானும், பிரசாந்த்தும் ஜாலியா தான் இருப்போம்.. ஆனா என் முன்னாடி அப்படி செய்து கடுப்பேத்தினாரு : பிரபல நடிகை வருத்தம்..!

Author: Udayachandran RadhaKrishnan
8 January 2023, 7:00 pm

தமிழ் சினிமாவில் 90ஸ்களில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை சங்கவி. விஜய் மற்றும் அஜித் உள்ளிட்ட பல டாப் ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். நடிகர் அஜித் நடிப்பில் வெளியான அமராவதி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். பின்னர், இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் விஜய் ஜோடியாக ரசிகன் படத்தில் நடித்தார். மீண்டும், விஷ்ணு இயக்கத்தில் விஜய் ஜோடியாக ஒரு படத்தில் நடித்திருந்தார்.

பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து டாப் ஸ்டாராக திகழ்ந்தவர் நடிகர் பிரசாந்த். இவருடன் ஜோடியாக மன்னவா படத்தில் நடித்திருந்தார் சங்கவி. இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

actresssangavi-Updatenews360

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சங்கவி, பிரசாந்துடன் படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதில், ” நானும் பிரசாந்தும் ஷூட்டிங் ஸ்பாட்டில் சண்டை போட்டு கொண்டு இருப்போம். அவர் அதிகமா குறும்பு தனம் செய்வார். பலூன் எடுத்து வந்து என் காதில் வைத்து ஓடைப்பார். இது போன்ற செயல்கள் செய்து என்னை கோவப்படுத்துவார்” எனக் கூறினார்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!