நா என்ன ATM மிஷினா?.. காசுக்காக 14 வயசுல அதை பண்ண சொன்னாங்க.. சங்கீதா கிரிஷ் வேதனை..!
Author: Vignesh9 March 2024, 5:36 pm
தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக அறியப்பட்டவர் நடிகை சங்கீதா . ஒரு சில படங்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகையானார். இவர் கபடி கபடி படத்தில் பாண்டியராஜனுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார். விக்ரமுக்கு ஜோடியாக பிதாமகன் படத்தில் நடித்தது நடிகை சங்கீதாவுக்கு மிகப் பெரிய பெயரை பெற்றுத் தந்தது. வெற்றிலை பாக்கு வாயில் கெட்ட வார்த்தைகள் பேசும் அவரது நடிப்பு அனைவரையும் கவர்ந்தது.
இவர் பிரபல பின்னணி பாடகர் கிரிஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அழகான பெண் குழந்தையும் உள்ளது. சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது மனம் திறந்து பேசிய சங்கீதா, எல்லா நடிகர்களுக்கும் இருக்கும் பிரச்சனை என்னவென்றால், சிறுவயதிலேயே நடிக்க வந்து விடுவார்கள். என்னுடைய அம்மா என்னை 16 வயதில் நடிக்க அனுப்பி வைத்தார்கள். என்னுடைய வருமானத்தை நம்பித்தான் என்னுடைய மொத்த குடும்பமே இருந்தது. நான் ஒரு ஏடிஎம் மிஷின் மாதிரி தான் என் வீட்டில் இருந்தேன். ஆனால், நமக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்கு அந்த வாழ்க்கையை வாழ வேண்டும் என்று, நாம் நினைக்கும் போது நம்மை தலையில் தூக்கி வைத்து கொண்டவர்கள் நமக்கு எதிரானவர்களாகிவிடுவார்கள்.
ஏனென்றால், ஏடிஎம் மிஷினில் கார்டு போட்டால் காசு வரவில்லை. அதனால், என்ன ஆகும் எப்படியாவது காசு வராதா என்று எதிர்பார்ப்போம். அப்படித்தான் என் வாழ்க்கையிலும் நடந்தது. எனக்கு ஒரு வாழ்க்கை இருக்கு ஒரு குழந்தை இருக்கு என் குடும்பத்திற்கு யாருக்கு என்ன செய்ய வேண்டுமோ அனைத்தையும் குறையே இல்லாமல் செய்து விட்டேன். நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த காசை எல்லாம் அவர்கள் சரியாக பயன்படுத்தாமல் ஊதாரித்தனமாக செலவு செய்து விட்டு மீண்டும் மீண்டும் என்னிடம் பணம் கேட்கும் போது கஷ்டமாக இருக்கிறது.
என் அம்மா தப்பானவங்களா இருக்கலாம். ஆனால், அவர்களை வீட்டை விட்டு வெளியில் அனுப்பும் அளவிற்கு நான் தப்பான மகள் இல்லை என நடிகை சங்கீதா பேட்டிய பழைய பேட்டி ஒன்று தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.