தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பிரபல நடிகையாக இருந்து வந்தவர் தான் நடிகை சங்கீதா .இவர் 90ஸ் காலகட்டத்தில் தொடர்ச்சியாக பல வெற்றி திரைப்படங்களில் நடித்து மிக குறுகிய காலத்திலேயே பிரபலமான ஹீரோயினாக பார்க்கப்பட்டார்.
குறிப்பாக ஹோம்லியான கதாபாத்திரத்துக்கு பக்காவாக பொருந்தும் நடிகையாக பல வெற்றி திரைப்படங்களில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார். தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் சங்கீதா நடித்திருக்கிறார் .
இதனுடையே 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த அவர் மகாநதி என்ற திரைப்படத்தில் தான் பெரிய காவேரியாக நடித்த பிறகு பூவே உனக்காக படத்தின் மூலம் எல்லாமே என் ராசாதான் படத்தின் மூலமும் பிரபலமானார்.
முதன் முதலில் 1990 ஆம் ஆண்டு வாழ்ந்து காட்டுவோம் என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமான இவர் தொடர்ந்து இதயவாசல், நாடோடி, சின்ன பசங்க, வசந்த மலர்கள், தேவர் வீட்டு பொண்ணு , மகாநதி , கேப்டன் , என் ராஜாங்கம் , சரிகமபதநி உள்ளிட்ட சில திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார் .
மிக குறுகிய காலத்திலேயே சில திரைப்படங்களில் மட்டும் நடித்திருந்தாலும் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்ட இவர் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காததால் திருமணம் குழந்தை என குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நான் ஏன் சினிமாவில் இருந்து விலகினேன் என்பது குறித்த ரகசியத்தை முதன்முறையாக உடைத்திருக்கிறார் அதில்.
அதில் அவர் நான் கிளாமராக நடிக்க வேண்டும் என்ற கண்டிஷன் உடனே நிறைய திரைப்பட வாய்ப்புகள் வந்தது. ஆனால், அதில் நடிக்க எனக்கு விருப்பமே இல்லை. அதனால் அந்த வாய்ப்புகளை நிராகரித்ததால் எனக்கு அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது.
இதையும் படியுங்கள்: அடடே… இதுதான் பாய் வீட்டு பிரியாணி சீக்ரெட்டா? நடிகை குஷ்பு கொடுத்த சூப்பர் டிப்ஸ்!
பின்னர் மார்க்கெட் இல்லாமல் அதன் பிறகு சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விட்டது என மனம் திறந்து பேசி இருக்கிறார். எனவே என்னுடைய சினிமா வாழ்க்கை முடிந்து போனதற்கு மிக முக்கிய காரணம் கிளாமராக நடிக்க சம்மதித்தாள் தான் என சங்கீதா வெளிப்படையாக பேசி இருக்கிறார்.