“சொல்லாமலே யார் பார்த்தது”.. சினிமாவை மிஞ்சிய ‘பூவே உனக்காக’ சங்கீதாவின் காதல் கதை..!

Author: Vignesh
13 ஜூலை 2023, 3:15 மணி
sangeetha -updatenews360
Quick Share

ஒரு சில மலையாள படங்களில் நடிகை சங்கீதா குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். இவர் தமிழில் என் ரத்தத்தின் ரத்தமே, இதய வாசல் போன்ற படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

இவர் நாயகியாக நடித்த முதல் திரைப்படம் ராஜ்கிரண் நடித்த எல்லாமே என் ராசாதான் என்ற படம் தான். அந்த படம் நல்ல வரவேற்பை பெற்ற பிறகு சங்கீதாவுக்கு பூவே உனக்காக படத்தில் விஜயுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து. சங்கீதாவிற்கு இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய புகழைப் பெற்றுக் கொடுத்தது.

sangeetha -updatenews360

இந்நிலையில், பூவே உனக்காக என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த சமயத்தில் சங்கீதாவும், அந்த படத்தில் ஒளிப்பதிவாளர் சரவணன் என்பவரும், நெருக்கமாக பழகி வந்துள்ளனர்.

sangeetha -updatenews360

இருவரும் நட்பாக பழகினாலும், இந்த படத்திற்கு பிறகு ஒரு வருடம் அவர்கள் சந்திக்கவே இல்லையாம். இதனை அடுத்து, ஆஹா என்ற படத்தின் படப்பிடிப்பில் சரவணன் இருக்கும்போது அதே ஸ்டுடியோவில் வேறு ஒரு தளத்தில் நடித்துக் கொண்டிருந்த சங்கீதாவை பார்த்து உள்ளார்.

sangeetha -updatenews360

அதன் பின்னர் இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி காதலர்களாக மாறியுள்ளனர். பின்னர், கடந்த 2000 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட சங்கீதா நடிப்பிற்கு முழுக்கு போட்டுள்ளார். இவருக்கு சாய் தேஜஸ்வதி என்ற மகள் உள்ளார்.

sangeetha -updatenews360

இந்த நிலையில், சரவணன் சிம்பு நடித்த சிலம்பாட்டம் என்ற திரைப்படத்தை இயக்கிய போது சங்கீதா தனது கணவருக்கு உதவி இயக்குனராகவும், இருந்துள்ளார். திருமணத்திற்கு பின்னர் நீண்ட இடைவெளிக்கு பிறகு அதாவது 14 வருடங்கள் கழித்து ஒரே ஒரு மலையாள திரைப்படத்தில் மட்டும் சங்கீதா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

sangeetha -updatenews360

அதன் பின்னர், ஒரு சில பட வாய்ப்புகள் வந்தபோதிலும், அவர் நடிக்க விரும்பவில்லை. தனக்கென்று ஒரு குடும்பம் குழந்தை என்று வந்துவிட்டதால், இனி நடிப்பில் தன்னால் கவனம் செலுத்த முடியாது என்று பல பேட்டிகளில் சங்கீதாவை குறிப்பிட்டுள்ளார்.

  • Woman Aghori ஒட்டுத் துணியில்லாமல் கோவிலுக்குள் நுழைந்த பெண் அகோரி… அனுமதி மறுப்பால் தீக்குளிக்க முயற்சி!
  • Views: - 710

    6

    2