அதை செய்ததால் தான் 2 முறை அபார்ஷன்.. -நடிகை சங்கவியின் கசப்பான நாட்கள்..!

Author: Vignesh
16 June 2023, 11:27 am

கோலிவுட்டில், 90-ஸ் kidsகளின் ஃபர்ஸ்ட் Crush என்று சொல்லும் அளவுக்கு வளம் வந்தவர் சங்கவி. அமராவதி படத்தில் அஜித் மட்டும் அறிமுகம் ஆகவில்லை. அந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக சங்கவியும் அறிமுகமானார். அதன் பின் விஜய், சரத்குமார் கார்த்திக் என பல நடிகர்களின் படத்தில் நடித்தார்.

இவர் கோலிவுட்டில் நுழைந்த புதிதில், விஜயுடன் காதல் வயப்பட்டு இருந்தார். அதன் பிறகு அந்த காதல் ஏனோ தோல்வி அடைந்தது. 40 வயது வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருந்த இவர், இரண்டு வருடங்களுக்கு முன்பு தான் திருமணம் செய்து கொண்டார்.

sangavi-updatenews360

நடிக்க வந்த புதிதில் தொடர்ந்து நிறைய விஜய் திரைப்படங்களில் அவருக்கு இணையாக நடித்தார். இருவருக்கும் நல்ல கெமிஸ்ட்ரி இருப்பதாக அப்போதைய பத்திரிக்கைகள் தெரிவித்தன. அப்போதைய பத்திரிக்கை செய்திகளில் இவர்களை பற்றி கிசுகிசு வராத நாளே இல்லை என்று சொல்லலாம்.

sangavi-updatenews360

இந்நிலையில், கர்ப்பமாக இருந்த போது வேலை பார்த்திருக்கக் கூடாது என்று நினைத்ததாகவும், அதன் பிறகு மீண்டும் கர்ப்பமான போது எந்தவித வேலையும் பார்க்கவில்லை வீட்டில் தான் இருந்ததாகவும், முழு ஓய்வில் இருந்தும் இரண்டாவது குழந்தைக்கு பிரச்சனை ஏற்பட்டு அந்த குழந்தையும், 8 மாதத்தில் அபார்ஷன் செய்ய வேண்டியதாகி விட்டது என்றும், இரண்டு முறை அபார்ஷன் நடந்ததும் நொறுங்கிப் போய் விட்டதாகவும், கணவர்தான் தனக்கு ஆறுதலாகவும், பக்கபலமாகவும், இருந்ததாக சங்கவி தெரிவித்தார்.

sangavi-updatenews360

மூன்றாவது முறையாக கர்ப்பமான சங்கவி கடந்த 2020 ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தையை பெற்றார். தற்போது தனது மகளுடன் விளையாடும் புகைப்படங்கள் வீடியோக்களை சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 460

    0

    0