தமிழ் சினிமாவில் ஹீரோயினுக்கு தங்கை, ஹீரோவுக்கு தங்கை என குணசித்திர வேடங்களில் நடித்தே மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் பேவரைட் நடிகையாக மனம் கவர்ந்தவர் நடிகை சரண்யா மோகன். இவர் கடந்த 2008ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்து மாபெரும் ஹிட் கொடுத்த திரைப்படம்தான் யாரடி நீ மோகினி. இந்த திரைப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நயன்தாரா நடித்து இருப்பார் மேலும் கருணாஸ், கார்த்தி குமார் போன்ற பல்வேறு பிரபலங்களும் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்த படம் வெளியானபோது வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் சரி நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது மட்டுமல்லாமல் மாபெரும் வெற்றியை தந்தது.குறிப்பாக நயன்தாராவின் தங்கையாக இந்த திரைப்படத்தில் நடித்த சரண்யா மோகன் மிகப்பெரும் அடையாளத்தை தேடிக்கொண்டார்.
இவர் இந்த திரைப்படத்திற்கு முன்பாகவே காதலுக்கு மரியாதை என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் கேரளாவை பூர்வீகமாக கொண்ட சரண்யா கடந்த 2015 ஆம் ஆண்டு அரவிந்த் கிருஷ்ணன் எதுவரை திருமணம் செய்துக்கொண்டார். இவருக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
குழந்தை பிறப்பிற்கு பின்னர் உடல் எடை கூடியிருந்த சரண்யா மோகன் பின்னர் உடல் எடையை குறைத்து ஸ்லிம் பிட் தோற்றத்திற்கு மாறிவிட்டார். காரணம் அவர் ஒரு பரதநாட்டிய கலைஞர். நாட்டியம் ஆடுவதற்கு உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார். அதற்காக தினமும் தவறாமல் ஒரு மணிநேரம் ஜிம் சென்று பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிறார். அதனுடன் யோகா, வாக்கிங் என ஆகியவற்றையும் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் படங்களில் சுட்டி பெண்ணாக ஹீரோக்களின் தங்கையாக துருதுருன்னு நடித்த சரண்யா மோகனின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளார். குடும்பம், குழந்தை, குட்டி என குடும்ப பெண்ணாக மாறியிருப்பதை பார்த்து நம்ம சரண்யா தங்கச்சியா இது? என ரசிகர்கள் வியந்து கேட்டு வருகிறார்கள்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.