காதல் கணவரின் மரணம்.. காசு இல்லாமல் சாப்பாட்டிற்கே கஷ்டப்பட்ட சீரியல் நடிகை..!
Author: Vignesh20 June 2023, 4:40 pm
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் சத்யபிரியா 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். இந்நிலையில், சத்யபிரியா வாழ்க்கையில் நடந்த பல சோகமான சம்பவங்கள் தற்போது, சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சத்யபிரியா தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவருடன் காதலில் இருந்து இரு வீட்டாரின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டார். சில ஆண்டுகளுக்கு பிறகு சத்தியபிரியாவின் கணவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அந்த சமயத்தில், சத்யபிரியாவிடம் காசு இல்லாமல் சாப்பாட்டிற்கே கஷ்டப்பட்டாராம்.
அப்போதுதான் இவர் தெலுங்கு படங்களுக்கு டப்பிங் கொடுக்க ஆரம்பித்துள்ளார் முன்னதாக கணவரின் மறைவுக்குப் பின் பொருளாதார சூழ்நிலையால் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் நடித்து வந்த சத்திய பிரியா சில வாரங்களுக்கு முன்பு தன்னுடைய கணவர் புகைப்படத்தை பதிவிட்டு உருக்கமான ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.