குழந்தை பெத்துக்க ஆசைதான் ஆனா… நயன்தாரா – விக்கி பாணியில் பிரபல நடிகை..!
Author: Vignesh19 October 2022, 3:30 pm
சமீபத்திய பேட்டி ஒன்றில் திருமணம் குறித்து பேசி உள்ள நடிகை தமன்னா, எல்லாரையும் போல் தனது பெற்றோரும் தன்னை திருமணம் செஞ்சிக்க சொல்லி வற்புறுத்துவதாக கூறி இருக்கிறார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தமன்னா. குறுகிய காலத்திலேயே விஜய், அஜித், சூர்யா என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து கோலிவுட்டில் படு பிசியாக வலம் வந்த இவரும் தற்போது பட வாய்ப்புக்காக ஏங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இருப்பினும் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத தமன்னா தற்போது டோலிவுட் மற்றும் பாலிவுட்டில் பிசியாக நடித்து வருகிறார்.
குறிப்பாக சமீபத்திய தகவல்படி சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க உள்ள புஷ்பா 2 படத்தில் ஐட்டம் சாங்கில் ஆடவும் தமன்னா கமிட் ஆகி உள்ளாராம். முதல் பாகத்தில் சமந்தா ஆடிய பாடல் வைரல் ஹிட்டானதோடு மட்டுமின்றி அதன்பின் அவரின் மார்க்கெட்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. அதேபோன்ற மேஜிக் தனக்கும் நடக்கும் என்கிற எதிர்பார்ப்பில் உள்ளார் தமன்னா.
இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் திருமணம் குறித்து பேசி உள்ளார் தமன்னா. அதில் அவர் கூறி உள்ளதாவது: “எல்லாரையும் போல் எனது பெற்றோரும் என்னை திருமணம் செஞ்சிக்க சொல்லி வற்புறுத்துகிறார்கள். எனக்கும் கல்யாணம் பண்ணனும், குழந்தை பெத்துக்கனும்னு ஆசை இருக்கு. ஆனா அது இப்போ முடியாது.
ஏனெனில் தற்போதைய சூழலில் நான் எனது சொந்த வாழ்க்கைக்காக கூட நேரம் ஒதுக்க முடியாத அளவு பிஸியாக இருக்கிறேன். என் பெற்றோரிடம் கூட பேச எனக்கு நேரம் இல்லை. இப்போதைக்கு எனது கவனமெல்லாம் சினிமா மீது தான்.
சூட்டிங் லொகேஷனில் தான் எனது சந்தோஷமே இருக்கிறது. எனது தொழிலை செய்ய பெற்றோர் மற்றும் ரசிகர்கள் எனக்கு அளித்த ஆதரவை நான் எப்போதும் மறக்க மாட்டேன்” என கூறி உள்ளார்.