பையன் கூட அந்த போட்டோவை வைச்சு தப்பா பேசுறாங்க.. எமோஷனல் ஆன சீரியல் நடிகை தீபா பாபு..!
Author: Vignesh22 March 2024, 10:39 am
சின்னத்திரை சீரியல்களில் நடிகையாக நடித்து பல கஷ்டங்களை சந்தித்திருக்கிறேன் என்று சீரியல் நடிகை தீபா பாபு சமீபத்தில் பேட்டிகளில் பகிர்ந்துள்ளார். அதாவது, இவர் 16 வயதில் திருமணம் செய்து ஆண் குழந்தையை பெற்றெடுத்த பின்னர் கணவரை விவகாரத்து செய்து, சமீபத்தில் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.
14 வயதில், நடிகையாக அறிமுகமான் 16 வயதில், தப்பான வயசுல தப்பான ஒருவரை தப்பான நேரத்தில் திருமணம் செய்து கொண்டேன். அதன்பின், எனக்கு தப்பான வாழ்க்கை அமைந்தது. விருப்பத்துடன் மீறி திருமணம் செய்து கொண்டேன் என்று கூறியிருந்தார்.

சமீபத்தில் மகன் இருக்கும் நிலையில், பாபு என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். தற்போது, அளித்த பேட்டி ஒன்றில் வாழணுமா என்ற கேள்வி எழும் போது, எனக்கு என் மகன் ஞாபகத்திற்கு வருவான். அவனை வளர்த்து ஒரு ஆளாகிட வேண்டும் என்பதற்காக உழைத்து வருகிறேன். ஒரு பெண்ணை வேடிக்கை பெண்ணாக பார்க்கும் இந்த சமூகத்தில் பல விஷயங்களை நான் அனுபவித்து இருக்கிறேன்.

இப்பவரையும் என்னிடம் பழகுவார்கள் உதவி என்றால் அதைத்தான் கேட்பார்கள். 18 வருட சினிமாவில் இருக்க வேற ரூட்டை எடுத்திருப்ப என்று கூறுவார்கள். சிறு சிறு ரேல்களில் நடித்துதான் தீபா என்ற இடத்திற்கே வந்தேன். தவிர வேறு எதுவும் கிடையாது. எனக்கு ஒரு வாழ்க்கை துணை வேண்டும் என்று என் அப்பாவும் மகனும் ஆசைப்பட்டதால்தான் கல்யாணம் பண்ணினேன்.
நீச்சல் குளத்தில் என் மகனுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த நிலையில், மோசமாக பேசுகிறார்கள். முதல் தடவை தவறாக பேசிய கருத்தை பார்த்து ஷாக் ஆனேன். இப்படி எல்லாம் பேசுவார்களா உங்க அம்மாவை கூட பிறந்தவர்களை எப்படி பார்க்கிறீர்கள் என்று கேட்கத் தோன்றும். இரண்டாம் வாழ்க்கை முடிவெடுத்தேன் என்றால், ஒரு நபரை நம்பி கல்யாணம் செய்தேன். பையன் மட்டும் நல்லவனாக இருக்காமல் வீட்டில் இருப்பவர்களும் நல்லா இருக்கணும் அப்படி இல்லாத போது தான் அந்த நினைப்பு வருகிறது என்று தீபா பாபு தெரிவித்திருக்கிறார்.