என் உடம்பு நான் காட்டுறேன், உனக்கு என்ன பிரச்னை?.. – கவர்ச்சி நடிகை ஷகிலா ஆவேசம்..!
Author: Vignesh17 May 2023, 4:30 pm
மோசமான படுக்கையறை காட்சிகள் கவர்ச்சி நடனம் என தமிழ் தென்னிந்திய சினிமா ரசிகர்களின் இரவு நேரத்தை இன்பமாக்கியவர் நடிகை ஷகிலா. இவர் தன் 15வது வயதில் ப்ளே கேள்ஸ் என்ற படத்தில் துணை நடிகையாக அறிமுகமானார்.
அதன் பின்னர் மலையாளம் , தமிழ் என பல்வேறு அடல்ட் திரைப்படங்களில் நடித்து முகம் சுளிக்க வைத்தார். அத்துடன் குடும்ப ரசிகைகளின் வெறுப்பையும் சம்பாத்தித்து வைத்தார். இருந்தாலும் 90களில் கவர்ச்சி நடிகையாக கொடிக்கட்டி பறந்த ஷகிலா இளசுகளின் கனவுக்கன்னியாக இருந்தார்.
அதன் பின்னர் இவரது அடையாளத்தையே மாற்றியது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி. அந்நிகழ்ச்சியில் மூலம் ஒரு புதிய அவதாரம் எடுத்த ஷகிலா தன் உண்மையான நல்ல குணத்தை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த மக்களையும் கவர்ந்தார். தொடர்ந்து நிகழ்ச்சி நடுவராக இருந்து வருகிறார்.
இந்நிலையில், பேட்டி ஒன்றில் தொகுப்பாளர் கேட்ட கேள்வி ஒன்றிருக்கு ஆவேசமாக ஷகிலா பதிலளித்து உள்ளார். அதாவது, தான் அந்த மாதிரியான மலையாள படங்களில் நடிக்க மாட்டேன் என்று தான் கூறியதாகவும், ஆனால் அதை சில பேர் தவறாக புரிந்து கொண்டதாகவும், மேலும் உடம்பை காட்டி நடிப்பது தன்னுடைய தனிப்பட்ட விஷயம் என்றும், அதில் உங்களுக்கு என்ன பிரச்சனை, நீங்களா காசு தர போறீங்க, தற்போது தன்னிடம் எந்த சொத்தும் இல்லை கடவுள் மட்டும் தான் தன்னுடன் இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.