மம்முட்டி, மோகன்லால் கூட என்கிட்ட அப்படி நடந்துக்கிட்டாங்க ; உண்மையை போட்டுடைத்த ஷகிலா.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
Author: Babu Lakshmanan11 April 2023, 6:29 pm
தமிழ் மற்றும் மலையாளத்தில் சில்க் ஸ்மிதாவுக்கு அடுத்தபடியாக கவர்ச்சி நாயகியாக வலம் வந்தவர் ஷகிலா. இவர் ஆபாச படங்களிலும் நடித்து 80ஸ் மற்றும் 90ஸ்களின் கனவு கண்ணியாக உலா வந்தவர். ஆரம்பத்தில் தமிழில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஷகிலா, குடும்ப சூழ்நிலை காரணமாக மலையாளத்தில் ஆபாச படங்களில் நடித்து வந்தார்.
தமிழகம், கேரளாவில் இவருக்கு என தனி ரசிகர் பட்டாளமே உண்டு. கவர்ச்சி நடிகையாக இருந்த இவரின் தோற்றத்தை பிரபல தனியார் தொலைக்காட்சியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மாற்றியது. அனைவரும் ஷகிலாவை அம்மா என்று சொல்ல ஆரம்பித்து விட்டனர்.
குக் வித் கோமாளியின் 2வது சீசனில் 2வது இடத்தை பிடித்தார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ஷகிலாவுக்கு மீண்டும் மவுசு எகிறியது. பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வாய்ப்பும் கிடைத்தது.
இந்த நிலையில், பிரபல தனியார் யூடியூப் சேனலுக்கு ஷகிலா பேட்டி அளித்திருந்தார். அதில் அவர் தனது வாழ்க்கையில் நடைபெற்ற சில விஷயங்களை கூறியது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அவர் பேசியதாவது :- என்னை சகிலாவாக பார்த்ததுக்கும், அம்மாவாக இப்போ பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. தற்போதைய சூழல் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. கேரளாவில் என்னுடைய படங்கள் வெளியானதால் அங்கு என்ன நடக்கிறது என்பது தெரியாமல் போய்விட்டது. எனது படங்களில் பிட்டு போட்டு ஓட்டி ரிலீஸ் பண்றாங்க என்பதை கேட்டபோது எனக்கு வருத்தமாக இருந்தது.
நான் நடித்த 23 படங்களுக்கு சென்சார் கொடுக்காமல் வைத்திருந்தார்கள். நான் மும்முட்டி, மோகன்லால் ரசிகை. அவர்கள் மீது எனக்கு எந்த கோபமும் இல்லை. ஆனால், அவர்கள்தான் எனது படங்களுக்கு சிக்கலை ஏற்படுத்த முயற்சித்தனர். இது கூட நான் கேள்விபட்டதுதான். உண்மையா..? எனத் தெரியவில்லை.
அவர்கள் 5 கோடி செலவழித்து படம் எடுக்கிறார்கள். நாங்கள் பத்து லட்சத்தில் படம் எடுக்கிறோம். 10 லட்சம் ரூபாய் பணம் 4 கோடி படத்தை காலி பண்ணால் கோபம் வர தானே செய்யும். அப்படித்தான் என் மீது வருத்தம் இருந்திருக்கும். அவர்கள் என்னை தடை செய்ய நினைத்தபோது நானே என் நடிப்பை தடை செய்து விட்டேன்.
21 படங்களுக்கு அட்வான்ஸ் வாங்கி இருந்தேன். அதன் பின் 2001 முதல் ஆபாச படங்களில் நடிப்பதில்லை என முடிவெடுத்தேன். இதனால், கொடுத்த அட்வான்ஸை திருப்பி கொடுத்துவிட்டேன். 22 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனாலும், இன்னும் அதே சக்கிலாவாக தான் சிலர் பார்க்கிறார்கள், எனக் கூறினார்.