கவர்ச்சி நடிகை ஷகிலா கன்னத்தில் பளார் விட்ட 80களின் கனவுக்கன்னி : பல நாள் கழித்து வெளியான உண்மை!!
Author: Udayachandran RadhaKrishnan11 February 2023, 2:32 pm
தமிழ் சினிமாவில் கதாநாயகி வாய்ப்புக்காக கஷ்டப்பட்டு நுழைந்த ஷகிலாவுக்கு துணை நடிகை கதாபாத்திரம்தான் கிடைத்தது. மூன்று, நான்கு படங்களில் நடித்த ஷகிலா பின்னர் மலையாள கரையோரம் ஒதுங்கினார்.

அங்கு அவருக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் கொட்டியது. ஆனால் கவர்ச்சி வாய்ப்பே கிடைக்க, வேற வழியில்லாமல், பணம் புகழ் சம்பாதிக்க கவர்ச்சி நடிகையாகவே மாறினார்.
அவரின் அந்த படத்திற்கு கூட்டம் கூடியது. ரசிகர்கள் பெருகிறது. மம்முட்டி, மோகன் லால் படங்கள் வெளியான போது, ஷகிலா படம் வெளியாகி அமோக வெற்றி பெற்றது. இதனால் மலையாள சூப்பர் ஸ்டார்களின் படம் படுத்துறங்கியது
இதையடுத்து மலையாளத்தில் கடையை விரித்த ஷகிலாவுக்கு காசு மழை கொட்டியது. என்னதான் கவர்ச்சி நடிகையாக இருந்தாலும், அவருக்கும் மனசு என்று ஒன்று இருக்கிறது. தன்னுடைய பர்சனல் வாழ்க்கை குறித்து உணர்ச்சிவசப்பட்டு பேசியுள்ளார் ஷகிலா.
ஒரு கட்டத்தில் சில்க் ஸ்மிதா கவர்ச்சிக் கன்னியாக உயர்ந்த போது, ஒரு படத்தில் அவருடன் இணைந்து நடிக்க வேண்டிய கட்டாயம் ஷகிலாவுக்கு ஏற்பட்டது.
அந்த படத்தில் ஷகிலா கன்னத்தில் சில்க் அறையும் காட்சிகள் இடம் பெற்றன. இந்த காட்சியை எடுப்பதற்கு முன் சில்க்கிடம் நீங்கள் பலமாக அறைவீர்களா? இல்லை லேசாக அறைவீர்களா? என் ஷகிலா கேட்டுள்ளார்.
அதற்கு சில்க் நான் லேசாக தான் அறைவேன் என கூறியுள்ளார். பிறகு படப்பிடிப்பின் போது சில்க் என்னை பலமாக அறைந்து விட்டார். இதனால் இயக்குநர் கட் என சொன்னவுடன், நான் இந்த படத்தில் நடிக்க மாட்டேன் என கூறி சென்றுவிட்டேன் என கூறினார்.
ஆனால் சில்க் வாழ்க்கை படமான டர்ட்டி பிக்சர்ஸ் (DIRTY PICTURES) படத்தில் இந்த காட்சியை மாற்றியமைத்துள்ளனர் என தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.