‘உங்களுக்கு எங்கிருந்து காசு வருது..’ கேள்வி கேட்ட ரசிகர்களுக்கு ஓப்பனாக போட்டோ போட்டு பதிலளித்த ஷாலு ஷம்மு..!

Author: Rajesh
25 June 2023, 3:00 pm

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ஒன்று தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம். மேலும் இத்திரைப்படத்தின் நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக அதாவது துணை நடிகையாக பிரபலமானவர் தான் ஷாலு ஷம்மு.

அதற்குமுன் 2009 ஆம் ஆண்டு காஞ்சிவரம் என்னும் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்தார். இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்காக பிலிம்பேர் விருதைப் பெற்றார். அதன்பின் பல படங்களில் காமெடி நடிகராகவும், துணை நடிகராகவும் நடித்துள்ளார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.  

shalu shammu-updatenews360

இவர் பதிவிடும் புகைப்படங்களை யார் விமர்சனம் செய்தாலும் அம்மணி கண்டுகொள்வதில்லை பதிவிடுவதையும் நிறுத்தவில்லை. இந்நிலையில், தான் சொகுசு கார் ஒன்று வாங்கி இருப்பதை பதிவிட்டதற்கு, நெட்டிசன்கள் கேள்வி கேட்டு வரும் பதிவு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகை ஷம்மு ஜகுவார் காரை வாங்கி இருப்பதை காருடன் எடுத்த புகைப்படத்துடன் சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார். இந்த கார் சுமார் 98 லட்சம் மதிப்பு கொண்டது என கூறப்படுகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் சினிமா பட வாய்ப்புகள் இல்லாத இவருக்கு எப்படி இவ்வளவு விலையில் கார் வாங்க முடியும்? இதற்கெல்லாம் காசு எங்கிருந்து வருகிறது என்றெல்லாம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஆனால் இவர் புது கார் வாங்கவில்லை. 2018 மாடல் பயன்படுத்திய காரை தான் செகண்ட் ஆக வாங்கி இருக்கிறார். இதனுடைய விலை 45 லட்சமாம். அதுமட்டுமில்லாமல் இதனுடைய காரை இவர் இஎம்ஐ முறையில் தான் வாங்கி இருக்கிறார். மேலும், ரசிகர்கள் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில், இவர் சுஹா (Suhaa) காஸ்மெடிக் கிளினிக்கின் எக்ஸ்க்யூட்டிவ் டைரக்டராக இருக்கிறார் என்பதையும் பதிவிட்டுள்ளார். அதாவது, ஸ்கின் தொடர்பான பிரச்சனைகளை சரி செய்யும் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஒன்றை நடத்தி வருவதன் மூலம் வருமானம் ஈட்டுகிறார் என்பதை தெரிவித்துள்ளார்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 688

    4

    2