குஷ்பூ இட்லினு சொல்றதுக்கு இதுதான் காரணமா?.. பலரும் அறிந்திடாத பலே சம்பவம்..!

Author: Vignesh
28 June 2024, 8:11 pm

தமிழ் சினிமாவின் பப்ளி நடிகையான குஷ்பு 1980களில் குழந்தை நட்சத்திரமாக தன் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். 1989 ஆம் ஆண்டு வருஷம் 16 என்ற தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். 1990களில் தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்தார். கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்தார். பின்னர் திரைப்பட இயக்குனர் சுந்தர் சி.யை மணந்தார். இவர்களுக்கு அவந்திகா, அனந்திதா என இரண்டு மகள்கள் உள்ளனர். குஷ்பு தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

sundar c kushboo

இந்நிலையில், குஷ்பூ தமிழ் சுத்தமாக தெரியாமல் நடிக்க வந்தாலும், விரைவில் மொழியை தெரிந்துகொண்டு தனது சொந்த குரலில் டப்பிங் செய்யும் அளவிற்கு முன்னேறி இருந்தார். இந்த ஒரு விஷயத்திற்காகவே அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் குவிந்தன என்றே கூறலாம். அண்மையில், ஒரு பேட்டியில் குஷ்பூ இட்லி பெயர் எப்படி ஆரம்பித்தது என்ற விஷயத்தை பற்றி பகிர்ந்து உள்ளார்.

kushpoo

தர்மத்தின் தலைவன் படத்தின் போது எல்லோரும் வாடா போடா என பேச நானும் அது நல்ல வார்த்தை என ரஜினியை வாடா என கூப்பிட்டேன். அதை கேட்டதும் பிரபு உடனே ரஜினியை அப்படியெல்லாம் கூப்பிடக்கூடாது என்ன வார்த்தை என புரிய வைத்தார். அதன் பின்னர், எனது கன்னத்தை கிள்ளி இட்லி போலவே இருக்கிறது எனக் கூற அப்படியே தான் குஷ்பூ இட்லி உருவானது என்று தெரிவித்துள்ளார்.

  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!