அம்மா ரோல் இருக்குனு சொல்லி Adjustment வர சொன்னாங்க: பிரபல நடிகை வேதனை..!

Author: Vignesh
23 March 2023, 1:35 pm

சினிமாவை பொருத்தவரை வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது என்பது பல வருடங்களாக நடக்கும் ஒரு விஷயம் தான். இதுபற்றி அவ்வப்போது சில நடிகைகள் வெளிப்படையாக தாங்கள் சந்தித்த அனுபவங்கள் பற்றி தெரிவித்து வருகிறார்கள். இதில், சில நடிகைகள் தைரியமாக ‘தான் அப்படிப்பட்ட பெண் இல்லை’ என மறுத்தும் விடுவார்கள்.

இதனிடையே, சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்காத, அல்லது மார்க்கெட் இல்லாத சில சிறிய நடிகைகள் மற்றும் துணை நடிகைகள் வேறு வழியில்லாமல் அதற்கு சம்மதம் தெரிவித்ததும் உண்டு. இதனிடையே, தயாரிப்பாளர், இயக்குனர், ஒளிப்பதிவாளர் மற்றும் அப்படத்தில் நடிக்கும் நடிகர் என எல்லோரிடமும் Adjustment செய்ய வேண்டும் என்று பலர் வெளிப்படையாகவே தெரிவித்து வருகிறார்கள்.

மேலும், மீ டூ இயக்கத்தில் பல துறையை சேர்ந்த பல பெண்கள் தாங்கள் சந்தித்த பாலியல் சீண்டல்கள், பாலியல் அத்துமீறல்கள் பற்றி பகிர்ந்து தற்போது பரபரப்பை ஏற்படுத்தியும் உள்ளனர்.

sharmila-updatenews360

அந்த வகையில், நடிகை ஷர்மிளா சினிமாவை பொறுத்தவரை ஹீரோயினாக நடித்து தற்போது அம்மா ரோல்களில் நடித்து வருகிறார். சிறிது காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்த நடிகை ஷர்மிளா, தற்போது சில படங்களில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் நடிகை ஷர்மிளா பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஷர்மிளா பல விஷயங்களை பகிர்ந்து உள்ளார். அதில், “கேரளாவை சேர்ந்த மூன்று வாலிபர்கள், அவர்களின் படத்தில் அம்மா ரோல் இருக்கிறது என்று அழைத்ததாகவும், தானும் அங்கு சென்றதாகவும், முதலில் தன்னிடம் மரியாதையாக தான் அவர்கள் பேசியதாகவும், ஒரு நாள் தன்னிடம் வந்து, எங்கள் மூன்று பேரில் ஒருவருடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்று கூறியதும் அங்கு இருந்து வந்துவிட்டதாக நடிகை ஷர்மிளா தெரிவித்துள்ளார்.

sharmila-updatenews360

இதனிடையே, நடிகை சர்மிளா தன்னுடைய மகனுக்கு ஆறு ஆண்டுகளாக விஷால் தான் ஸ்கூல் ஃபீஸ் கட்டி வருவதாகவும், நடிகர் விஷால் என் மகனுக்கு மட்டும் இல்லாமல் நிறைய குழந்தைகளுக்கு படிக்க உதவி செய்துவருகிறார் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?