எல்லாமே லேட்டா தான் கிடைச்சுச்சு.. 48 வயதில் கர்ப்பமாக இருக்கும் கவுண்டமணி பட நடிகை பேட்டி..!
Author: Vignesh28 June 2023, 11:00 am
80, 90களில் நடித்த நடிகைகள் சிலர் இப்போது எங்கு இருக்கிறார்கள் என்பது கூட தெரியாத நிலையில், தான் கோடம்பாக்கம் இருந்து வருகிறது. அப்படி இப்போது ஒரு பிரபலத்தை பற்றிய செய்திகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
90 காலகட்டத்தில் நகைச்சுவை மற்றும் கவர்ச்சி வேடங்களில் நடித்து பிரபலமானவர்தான் ஷர்மிலி 13 வயதிலிருந்து சினிமாவில் நடித்த ஷர்மிலி பல வருடங்களுக்குப் பிறகு ஒரு பேட்டி ஒன்று கொடுத்துள்ளார்.
அதில் அவர் தான் பல வருடங்களுக்கு பிறகு கர்ப்பமாக இருப்பது உண்மைதான் என்றும், தான் கொஞ்சம் கவனமாக இருந்து வருவதாகவும், இளம் வயதில் குழந்தை பெற்றுக் கொண்டிருந்தாள் எப்படி வளத்திருப்பேன் என தெரியாது எனவும், இப்போது கர்ப்பமாக இருப்பதால் குழந்தையை நன்றாக வளர்க்க முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும், தனது வாழ்க்கையில் எல்லா விஷயங்களும் தாமதமாக தான் கிடைத்தது. குழந்தையும் அப்படித்தான் 40 வயதில் கிடைத்துள்ளது என பேசி உள்ளார்.