மார்க்கெட்டே இல்ல ஆனாலும் எப்படி…? நடிகை ஷோபனாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

Author: Shree
7 June 2023, 11:03 am

தளபதி, எனக்குள் ஒருவன், இது நம்ம ஆளு, போடா போடி என பல தமிழ் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஷோபனா. இப்போது நடிப்புக்கு சின்னதாக லீவ் போட்டு விட்டார். தற்போது சென்னையில் பரத நாட்டியப்பள்ளியும் நடத்தி வருகிறார்.

இவர் தமிழில் மட்டுமில்லாமல், மலையாளத்தில் இவர் மிக பிரபலமான நடிகை, Infact ரஜினி, ஜோதிகா நடித்த சந்திரமுகி படத்தில் சந்திரமுகி கதாபாத்திரத்தை ஏற்று, தேசிய விருது வாங்கியவர் ஷோபனா தான். இவர் பழம்பெரும் நடிகை பத்மினியின் சொந்தகாரர் ஆவார். இப்போது இவருக்கு 50 வயதாகிறது, இருந்தும் இப்பவரை திருமணம் செய்துகொள்ளவில்லை, ஆனால் 20 ஆண்டுகளாக ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்க்கிறார்.

இந்நிலையில் சினிமாவில் மார்க்கெட் இழந்துள்ள இந்த நேரத்தில் அவர் வைத்துள்ள சொத்து மதிப்பு குறித்த விவரம் இணையத்தில் வெளியாகி எல்லோரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது. ஆம், அவர் சுமார் ரூ. 40 கோடி சொத்துக்கு சொந்தக்காரர் என தகவல் ஒன்று இணையத்தில் காட்டுத்தீயாக பரவி வருகிறது.

  • Ajith kumar Good Bad Ugly Remake of Korean Hit Movie கொரியன் படத்தின் காப்பியா GOOD BAD UGLY.? பிரம்மாண்ட ஹிட் கொடுத்த படத்தின் ரீமேக்?