வலியால் துடிக்கும் போது சித்து பண்ணதை மறக்க முடியல.. சீரியல் நடிகை ஸ்ரேயா OpenTalk..!
Author: Vignesh12 March 2024, 5:49 pm
திருமணம் என்ற சீரியல் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சித்து மற்றும் ஸ்ரேயா அஞ்சன். இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது இருவரும் காதலித்து கல்யாணம் செய்து கொண்டனர். இதனை அடுத்து, ராஜா ராணி சீசன் 2 சீரியல் கதாநாயகனாக சித்து நடித்து இல்லத்தரசிகளின் மத்தியில் இடம் பிடித்தார்.

ரஜினி என்ற சீரியல் ஸ்ரேயா அஞ்சன் நடித்திருந்தார். இந்நிலையில், அவர்கள் அளித்த பேட்டி ஒன்றில் திருமண வாழ்க்கை குறித்து தற்போது மனம் திறந்து பேசிய இருக்கிறார். அதில், ஸ்ரேயா பேசுகையில், ஒரு நாள் நடந்த சம்பவத்தை என்னால் மறக்கவே முடியாது. ஒரு நாள் ஒரு ஷூட்டிங்காக கொடைக்கானல் சென்று இருந்தோம். அங்கு எதிர்பார்க்காத விதமாக எனக்கு பீரியட்ஸ் வந்துவிட்டது. அப்போது, நான் பேட் எதுவும் கொண்டு செல்லவில்லை மறந்துவிட்டேன்.

நாங்கள் இருக்கும் இடத்திற்கு வந்தால் கூட ஒரு மணி நேரம் டிராவல் செய்ய வேண்டி இருக்கும். அதனால், நான் என்ன செய்வதென்று தத்தளித்து தவித்துக் கொண்டிருந்தபோது எனக்கு சித்து தான் சில உதவிகளை செய்தார். அதற்கு பிறகு தான் எனக்கு அவர் மீது பெரிய நம்பிக்கையை வந்தது. அவரை பிடிக்கவும் தொடங்கியது என்று தெரிவித்துள்ளார்.