தமிழ் சினிமாவில் யாரும் எட்டக்கூடமுடியாத வகையில் மிகப்பெரிய காமெடி நடிகராக வலம் வந்தவர் வைகைப்புயல் வடிவேலு. தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகரான இவர் எப்படிபட்ட காமெடியாக இருந்தாலும் தனது பாடி லேங்குவேஜ் மூலம் நிலைநிறுத்திடுவார்.
ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒவ்வொரு நகைச்சுவை நடிகர்கள் மாறுவது வழக்கம். ஆனால் வடிவேலுவுக்குப் பின் அடுத்தாக இவர் என சொல்ல முடியாத அளவுக்கு அவர் இருந்து வருகிறார். நடிகர் ராஜ்கிரண் தான் வடிவேலுவை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்துவைத்தார்.
“என் தங்கை கல்யாணி’ படம் மூலம் சிறிய பாத்திரத்தில் தன் பயணத்தைத் துவங்கிய வடிவேலு தொடர்ந்து என் ராசாவின் மனசிலே, சின்ன கவுண்டர், சிங்கார வேலன், தேவர் மகன், காதலன், காதலர் தேசம் என தொன்னூறுகளின் இறுதியில் கவனிக்கப்படும் முகமாக மாறினார்.
அதன் பின்னர் , ரஜினி ,கமல் , அஜித், விஜய், பிரசாந்த் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார். இதனிடையே சமீப நாட்களாக நடிகர் வடிவேலு குறித்து அடுக்கடுக்கான புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. அதையும் தாண்டி அவர் தொடர்ந்து பெரிய நடிகர் என்ற அந்தஸ்தில் தான் இருந்து வருகிறார்.
இந்நிலையில் வடிவேலு உடன் நடித்து சினிமா கெரியரையே வீணடித்துக்கொண்ட நடிகை குறித்து தகவல் தற்போது வெளியாகியுள்ளது. நடிகை ஸ்ரேயா சரண் வடிவேலு உடன் சேர்ந்து இந்திரலோகத்தில் நா. அழகப்பன் என்ற திரைப்படத்தில் நடித்து அவருடன் டூயட் ஆடியிருப்பார். அந்த படத்தில் தனக்கு ஜோடியாக ஸ்ரேயா சரண் தான் வேண்டும் என இயக்குனரிடம் அடம்பிடித்து கேட்டாராம் வடிவேலு. ஆனால், ஸ்ரேயா சரண் அந்த படத்தில் தனக்கு தானே ஆப்பு வைத்துக்கொண்டார்.
ஆம், அதன் பின் படங்களில் நடிக்க பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லையாம். கிடைத்த ஒரு சில வாய்ப்புகளும் அந்த படத்தின் ஹீரோக்கள் வடிவேலுக்கு ஜோடியாக நடித்த அந்த ஹீரோயின் வேண்டாம் மவுஸ் இருக்காது என கூறி பல பேர் ஸ்ரேயா சரணை நிராகரித்து விட்டார்களாம். இதனால் ஒரு கட்டத்தில் ஸ்ரேயா சரண் அட்ரெஸே இல்லாமல் வெளிநாட்டு காதலரை ரகசியமாக திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச சந்தையில் நிலவும் விலை பொறுத்தே தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயர்ந்து கொண்டே…
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
This website uses cookies.