இதனால் தான் கர்ப்பத்தை அறிவிக்காமல் மறைத்து வைத்தேன்..! நடிகை ஸ்ரேயா கூறிய காரணம்…?
Author: Udayachandran RadhaKrishnan15 December 2022, 6:45 pm
2001ம் ஆண்டு இஷ்டம் என்னும் தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் நடிகை ஸ்ரேயா சரண். அதனைத் தொடர்ந்து, சந்தோஷம் என்னும் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து பெரும் புகழ் இவருக்கு பெற்றுக் கொடுத்தது. தென்னிந்திய திரையுலகில் தனக்கென்ற தனி இடத்தை பிடித்த ஸ்ரேயா, தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் படங்களில் நடித்துள்ளார். சுமார் 75 படங்களில் நடித்துள்ள இவர், அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார்.
தமிழில், தருண், திரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான எனக்கு 20 உனக்கு 18 படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். 2007ம் ஆண்டு, சூப்பர் ஸ்டார் சிவாஜியுடன் ‘சிவாஜி’ படத்தில் நடித்ததன் மூலம் தனி அந்தஸ்தை பெற்றார். மழை, திருவிளையாடல் ஆரம்பம், கந்தசாமி, அழகிய தமிழ் மகன், ரௌத்திரம், தோரணை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தனி ரசிகர் பட்டாளத்தை கொண்ட ஸ்ரேயா, 2018ம் ஆண்டு, தனது ரஷ்ய ஆண் நண்பரான Andrei Koscheev என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த மாதம் ‘ராதா’ என்ற பெண் குழந்தையும் பிறந்துள்ளது.
ஸ்ரேயா தான் கர்ப்பமாக இருப்பதை அறிவிக்காமல், திடீரென ஒருநாள் தனக்கு பெண் குழந்தை இருக்கிறது. அவளுக்கு ராதா என பெயர் சூட்டி இருக்கிறோம் என அறிவித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார். இந்நிலையில் சமீபத்தில் ஸ்ரேயா அளித்த பேட்டியில் தான் கர்ப்பத்தை மறைக்க என்ன காரணம் என விளக்கி இருக்கிறார்.
அப்போது அவர் கூறியதாவது, “நிறைய பயம் இருந்தது. நான் எனக்காக நேரம் செலவழிக்க விரும்பினேன். நான் குண்டாகி இருந்ததை பற்றி கூட கவலைப்படவில்லை. என்னை பற்றி யார் என்ன எழுதினாலும் கவலை இல்லை நான் குழந்தை மீது மட்டும் கவனம் செலுத்தினேன். நான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்தால் அதன் பின் மீண்டும் சினிமாவுக்கு வர நீண்ட காலம் எடுக்கும். யாரும் உடனே வாய்ப்பு கொடுக்க மாட்டார்கள். நான் எனக்கு குழந்தை பிறந்ததை அறிவித்தபோது ஏற்கனவே படங்களில் கமிட் ஆகி நடித்துக் கொண்டிருந்தேன். அப்போது ராதா 9 மாத குழ்நதை. படத்தில் நடிப்பதற்காக உடல் எடையை அதிகம் மெனக்கெட்டு குறைத்தது பிரெஷர் ஆக இருந்தது” என ஸ்ரேயா கூறியுள்ளார்.