கல்யாணம் ஆகி ஒரு வருஷம் கூட ஆகல.. நாதஸ்வரம் சீரியல் நடிகையின் கணவர் மாரடைப்பால் மரணம்..!
Author: Vignesh3 August 2023, 4:30 pm
நாதஸ்வரம் சீரியலில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர் ஸ்ருதி ஷண்முகப்பிரியா. இதனைத் தொடர்ந்து இவர் சிறிது கால இடைவெளிக்கு பின்னர் வாணி ராணி, கல்யாண பரிசு, பொன்னூஞ்சல் உள்ளிட்ட பல தொடர்களில் நடித்து பிரபலமானார்.
கடந்த ஆண்டு பாடிபில்டரும், உடற்பயிற்சியாளருமான அரவிந்த் சேகர் என்பவரை எளிய முறையில் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
திருமணம் ஆகி இருவரும் இணையதளத்தில் ஆக்டிவாக இருந்து ரீல்ஸ் வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டு வந்தனர். இந்நிலையில், ஸ்ருதி சண்முகப்பிரியாவின் கணவர் அரவிந்த் சேகர் மாரடைப்பு பிரச்சினையால் இன்று மரணம் அடைந்ததாக செய்திகள் பரவியுள்ளது.
சமீபத்தில் தன் கணவருடன் இணைந்து ஒரு விளம்பர வீடியோவை எமோஷனலாக ரீல்ஸ் செய்து வெளியிட்டிருந்த நிலையில், அவரது கணவர் மரணம் சின்னத்திரை ரசிகர்கள் மற்றும் பிரபலங்களுக்கு அதிர்ச்சி கொடுத்து உள்ளது.