My Angel என காதலனுடன் இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டு ஸ்ருதிஹாசன் பதிவு : வாழ்த்தும் ரசிகர்கள்..!

Author: Rajesh
31 March 2022, 2:04 pm

தமிழ் சினிமாவில் ஸ்ருதிஹாசனுக்கு சுமாரான வரவேற்பு இருந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கை சற்று நன்றாகவே உள்ளது. அதிலும் இவரது காதல் வாழ்க்கை பேஷ் ஏற்கனவே லண்டனை சேர்ந்த மைக்கேல் என்பவரை மனதார காதலித்தார். மைக்கேல் லண்டனில் வசித்ததால் அடிக்கடி அங்கு சென்று அவருடன் நேரம் செலவிட்டார். மைக்கேலும் அடிக்கடி இந்தியா வந்தார்.

இருப்பினும் ஆளுக்கு ஒரு இடத்தில் இருப்பதால் இது சரிபட்டு வரவில்லை, அதனால் இனி காதலர்களாக அல்ல நல்ல நண்பர்களாக மட்டும் இருக்க முடிவு செய்துள்ளோம் என்று வழக்கம்போல் சொல்லிவிட்டு மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கினார் ஸ்ருதி.

தற்போது ஷாந்தனு என்று ஒருவரை காதலிப்பதாக கூறியுள்ளார். இவரது நடிப்பில் வெளியான ‘கிராக்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டடித்தது அதனை தொடர்ந்து ‘லாபம்’ படம் சரியாக போகவில்லை.

அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார். அந்த வகையில் தற்போது தனது காதலருடன் இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டு, பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஸ்ருதிஹாசன் ரசிகர்களும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 1291

    2

    1