ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. அது என்ன சிலுவை?.. ஸ்ருதிஹாசனை வம்பு இழுக்கும் நெட்டிசன்கள்..!

Author: Vignesh
13 February 2024, 10:45 am

கமல் ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இவர் 7ம் அறிவு படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பிறகு அஜித் , தனுஷ், விஷால், விஜய், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார்.

இவர் தற்போது காதலன் சாந்தனு ஹசாரிகா என்ற பாப் பாடகரை காதலித்து அவருடன் மும்பையில் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருகிறார். அவ்வப்போது காதலுடன் கட்டியணைப்பது, லிப்லாக் போன்ற புகைப்படங்களை வெளியிட்டு முகம் சுளிக்க வைப்பார்.

இந்நிலையில், கமலஹாசன் தயாரிப்பில் தன்னுடைய வரிகளில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிப்பில் ஒரு ஆல்பம் பாடலை உருவாக்கி வருகிறார் ஸ்ருதி ஹாசன். தற்போது, கழுத்தில் சிலுவையுடன் கிளாமர் ஆடை அணிந்து மயக்கும் போஸ் கொடுத்து புகைப்படங்களை இணையதளத்தில் பகிர்ந்து உள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலான நிலையில் ரசிகர்கள் ஸ்ருதிஹாசன் மதம் மாறிவிட்டாரா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

  • Keerthy Suresh new glamorous look கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 281

    0

    0