எனக்கு அந்த பிரச்சனை இருக்கு.. நடிகை ஸ்ருதி ஹாசன் சொன்ன அதிர்ச்சித் தகவல்!

Author: Rajesh
1 July 2022, 3:10 pm

ஸ்ருதி ஹாசன் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தெலுங்கில் தற்போது பல முன்னணி நடிகர்களும் ஜோடியாக நடித்துவருகிறார். இந்த நிலையில், ஸ்ருதி ஹாசன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு PCOS பிரச்னை இருப்பது குறித்து பதிவிட்டிருக்கிறார்.

தீவிரமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோவுடன் இணைத்து தனக்கு இருக்கும் PCOS (polycystic ovary syndrome) மற்றும் endometriosis என்ற ஹார்மோனல் பிரச்னை இருப்பது தொடர்பாக விரிவாக குறிப்பிட்டுள்ளார்.

அதில் ‘மோசமான ஹார்மோனல் பிரச்னையில் இருந்து மீள்வதற்காக போராடி வருகிறேன். வளர்சிதை மாற்ற சவால்கள், வீக்கம், சமநிலையின்மை ஆகியவற்றுடன் போராடுவது கடினமானதுதான் என பெண்களால் நன்றாகவே அறிய முடியும்.

ஆனால் அதையே நினைத்துக் கொண்டிருப்பதை நிறுத்திவிட்டு, எனக்கு வந்த இந்த உபாதையை ஏற்றுக் கொண்டு அதனுடன் சேர்ந்து நானும் போராட தொடங்கியிருக்கிறேன். அதற்காக முறையாக உணவை உண்டு, சரியாக தூங்கி, உற்சாகமாக உடற்பயிற்சி செய்வதற்காக எனக்கு நானே நன்றி கூறிக் கொள்கிறேன்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!