இடுப்பழகிக்கே இப்படி ஒரு நிலைமையா? நடிப்பு வரலன்னு செ**** அடித்த இயக்குனர்!
Author: Shree19 September 2023, 1:37 pm
ஒல்லி பெல்லி இடுப்பழகியாக ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவையும் தன் இடுப்பசைவால் ஆட்டி படைத்தவர் நடிகை சிம்ரன். மும்பை பஞ்சாபி குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவர் நிகழ்ச்சி தொகுப்பாளராக சினிமாத்துறையில் அறிமுகமானார்.
1995-இல் அவர் நடித்த முதல் படமான சனம் பெருந்தோல்வியை அடைந்தது. அதன் பின்னர் இந்தியை தவிர மற்ற மொழிகளில் கவனம் செலுத்தி மலையாளத்தில் மம்முட்டியுடன் இந்திரபிரஸ்தம், கன்னடத்தில் சிவராஜ்குமாருடன் சிம்ஹடா மாரி படத்திலும் அப்பாய் காரி பெல்லி என்ற தெலுங்குப் படத்திலும் நடித்தார்.
தமிழில் 1997 ஆம் ஆண்டு ஒன்ஸ்மோர் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இங்கு முதல் படமே சூப்பர் ஹிட் அடித்தது. பின்னர் நேருக்கு நேர், துள்ளாத மனமும் துள்ளும், வாலி , ஜோடி , பிரியமானவளே , பஞ்சதந்திரம் , கன்னத்தில் முத்தமிட்டால் , வாரணம் ஆயிரம் என பல்வேறு ஹிட் படங்களில் நடித்தார்.
தற்போது குணச்சித்திர ரோலில் நடித்து வரும் சிம்ரன், அந்தகன், துருவ நட்சத்திரம், வணங்காமுடி உள்ளிட்ட பல படங்களில் நடித்தும் வருகிறார். சிம்ரன் கடந்த 2003ல் பல ஆண்டு காதலரான தீபக் பக்கா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி இரு மகன்கள் இருக்கிறார்கள்.
தற்ப்போது 47 வயது ஆகும் சிம்ரன் மீண்டும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். மிகச்சிறந்த நடிகை என ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ள சிம்ரனுக்கே ஒரு நேரத்தில் நடிப்பு வரவில்லை என்று இயக்குனர் செல்போனால் அவரை அடித்த சம்பவம் தற்போது கசிந்துள்ளது. அதாவது எஸ். ஜெ சூர்யாவின் இயக்கத்தில் நியூ படத்தில் நடித்தபோது தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அதன் பிறகு எஸ். ஜெ சூர்யாவின் உதவியாளர் கெஞ்சி கூத்தாடி அவரை அழைத்து வந்து மீண்டும் நடிக்க வைத்தாராம். இதை கேட்டதும்… ” சிம்ரனுக்கே இப்படி ஒரு நிலைமையா என ரசிகர்கள் ஷாக் ஆகிவிட்டார்கள்.