வாட்டி வதைத்த புற்றுநோய்.. அங்காடி தெரு நடிகை மரணம்.. சினிமா பிரபலங்கள் இரங்கல்..!

Author: Vignesh
7 August 2023, 11:30 am

இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம் அங்காடித் தெரு. அஞ்சலி ஹீரோவாக நடித்த இத்திரைப்படத்தில் நடிகர் மகேஷ் ஹீரோவாக நடித்திருந்தார். இப்படத்தில் இயக்குநர் வெங்கடேசு மற்றும் கனாக்காணும் காலங்கள் பாண்டி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் நடிகை சினேகா கவுரவ தோற்றத்தில் நடித்திருந்தார்.

சென்னை ரங்கநாதன் தெருவில் உள்ள பிரமாண்ட வணிக வளாகங்களில் பணிபுரியும் மக்களின் கொத்தடிமை வாழ்க்கை முறையை அடிப்படையாகக் கொண்டு வெளியான இத்திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்தது.

sindhu-updatenews360

அங்காடித் தெரு படத்தில் ஒரு சில காட்சிகளில் நடித்தாலும் ரசிகர்களை கவர்ந்திருப்பார் நடிகை சிந்து. இந்த படத்தின் மூலம் அவர் பிரபலமானார். ஆனால் அவர் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள் கொஞ்சு நஞ்சமில்லை.

அங்காடித்தெரு திரைப்படத்தின் மூலமாக பரீட்சையமான சிந்து புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பல வருடங்களாக போராடி கொண்டு இருந்த நிலையில் இன்று அதிகாலை 2.15க்கு காலமானார்.

இந்தநிலையில், புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நடிகை சிந்து கடந்த சில நாட்களாக கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்து உள்ளார். இதனிடையே, சிகிச்சை பலனின்றி நடிகை சிந்து மரணமடைந்துள்ளார். 42 வயதாகும் நடிகை சிந்துவின் மரண செய்தியை கேட்டு திரையுலகில் உள்ள பலரும் அதியடைந்துள்ளனர்.

  • ajith kumar and sivakarthikeyan on csk vs srh match அங்க Focus பண்ணுங்க: மைதானத்தில் திடீரென தோன்றிய அஜித்-சிவகார்த்திகேயன்; நம்பவே முடியலையே!