ஹோம்லி wife மெட்டீரியலில் இருந்த ஈரம் பட நடிகையா இது? முகம் வீங்கி அடையாளமே தெரியாம போயிட்டாங்களே!

Author: Shree
1 September 2023, 11:24 am

கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவரான நடிகை சிந்து மேனன் தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களில் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். இவர் குழந்தை நடிகையாக ராஷ்மி என்னும் கன்னடத் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார்.

sindhu menon

அதன் பின்னர் தமிழில் யூத் படத்தில் அருணா என்ற கேரக்டரில் நடித்து முகமறியப்பட்டார். பின்னர் 2009ம் ஆண்டு வெளியான ஈரம் படத்தில் ஹீரோயினாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதன் பிறகு 2003ம் ஆண்டு பிரபு என்பவரை திருமணம் செய்துக்கொண்டு மூன்று குழந்தைகளுக்கு அம்மாவாகி செட்டிலாகிவிட்டார்.

பின்னர் சினிமாவை விட்டு விலகி குடும்பம் குழந்தைகள் என மனதிற்கு பிடித்த அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகின்றார். இந்நிலையில் அவரது லேட்டஸ்ட் புகைப்படம் சமூகவலைத்தளத்தில் வெளியாகி அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. முகமெல்லாம் வீங்கி ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறிபோயுள்ளார்.

இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள். அழகான ஹோம்லி மனைவி மெட்டீரியலில் இருந்த சிந்து மேனனா இது? என ஷாக்காகி கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்.

  • Madhavan on social media impact குழந்தைகளை பார்க்கவே பயமாக உள்ளது…நடிகர் மாதவன் வேதனை.!
  • Close menu