வடிவேலுவுக்கு ஜோடியாகும் 90ஸ் கனவுக் கன்னி.. இதை எதிர்பார்க்கவே இல்லயே..!

Author: Vignesh
20 January 2024, 6:39 pm

தமிழ் சினிமாவில் யாரும் எட்டக்கூடமுடியாத வகையில், மிகப்பெரிய காமெடி நடிகராக வலம் வந்தவர் வைகைப்புயல் வடிவேலு. தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகரான இவர் எப்படிபட்ட காமெடியாக இருந்தாலும் தனது பாடி லேங்குவேஜ் மூலம் நிலைநிறுத்திடுவார்.

ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒவ்வொரு நகைச்சுவை நடிகர்கள் மாறுவது வழக்கம். ஆனால் வடிவேலுவுக்குப் பின் அடுத்தாக இவர் என சொல்ல முடியாத அளவுக்கு அவர் இருந்து வருகிறார். இதனிடையே சமீப நாட்களாக நடிகர் வடிவேலு குறித்து அடுக்கடுக்கான புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.

vadivelu

குறிப்பாக, போண்டாமணி, விஜயகாந்த் மறைவின்போது நேரில் சென்று அஞ்சலி செலுத்தாத வடிவேலு ஒரு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை என்றும், நேரில் வந்து அஞ்சலி செலுத்தாது ஏன் என்கிற கேள்விகளும் ஒரு பக்கம் எழுந்து வருகிறது. வடிவேலுவுடன் பணியாற்றின் நடிகர்களின் இரங்கலுக்கு போகாததால் அவர் மீது பட விமர்சனங்களும் எழுந்து வருகிறது.

இந்நிலையில், சமீபத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தாத வடிவோலு கலைஞர் 100 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முதல் ஆளாக வந்ததே பல விமர்சனங்களை ஏற்படுத்தி வந்தது.

vadivelu

இந்நிலையில், வடிவேலு பகத் பசில் மீண்டும் இணைந்து சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடிக்கிறார்கள். இதற்கான அறிவிப்பு சமீபத்தில் தான் வெளிவந்தது. இந்த படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக சித்தாரா நடிக்க உள்ளதாகவும், தகவல்கள் வெளியாகி உள்ளது. 90 s காலத்தில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்த நடிகை சித்தாரா இப்படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக நடிக்க உள்ளது ரசிகர்களிடையே ஆச்சிரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

Chithara -updatenews360

வெள்ளித்திரை மட்டுமின்றி சின்ன திரையிலும் பிரபலமான நடிகையாக இருக்கும் நடிகை சித்தாரா 50 வயதாகியும், இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். தனது தாய் தந்தையின் மீது அதிக பாசம் கொண்டிருந்ததால் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என முடிவை எடுத்ததாக நடிகை சித்தாராவே பேட்டி ஒன்றில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

  • AR Murugadoss about SIkandar movie remake of Thalapathy's Sarkar விஜயால் ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த பெரும் சிக்கல்.. இதுதான் முடிவு!