தென்னிந்திய சினிமா உலகில் 90 கால கட்டங்களில் மிகப் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை சிவரஞ்சனி. இவருடைய பூர்வீகம் சென்னை மயிலாப்பூர். மேலும்,நடிகை சிவரஞ்சனி பூர்வீகம் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்தவர். இவருக்கு சிறு வயதில் இருந்தே நடனத்தில் அதிக ஆர்வமும், திறமையும் கொண்டவர். மேலும், தனது கல்லூரி படிப்பு படிக்கும் காலத்திலே பல நாடகங்களில் நடித்தும், பல மேடைகளில் நடந்த நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று பல பாராட்டுகளை வாங்கிக் குவித்தவர். மேலும், இவர் 1991 ஆம் ஆண்டு “மிஸ்டர் கார்த்திக்” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
மேலும்,90 கால கட்டங்களில் பல ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர். அதுமட்டும் இல்லாமல் இவருடைய வசீகரமான கண்ணுக்கு பல பேர் அடிமை என்று சொல்லலாம். பல ஆம் ஆண்டு தமிழில் கிட்டத் தட்ட பிரபலமான முன்னணி நடிகையாகவும் ஆகி விட்டார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல படங்களிலும் நடித்து உள்ளார். இதனை தொடர்ந்து 1999 ஆம் ஆண்டுக்கு பிறகு தெலுங்கில் பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
பின்னர் நடிகை சிவரஞ்சனி ஆந்திராவிலேயே செட்டில் ஆகி விட்டார். திருமணத்துக்குப் பிறகு குடும்பம், குழந்தைகள் என நடிகை சிவரஞ்சனி பிஸியாக உள்ளார். இவர்களின் மூத்த மகன் பிஸியாக “நிர்மலா கான்வெண்ட்” என்ற தெலுங்கு படத்தில் நடித்து இருந்தார். தன்னுடைய மகள் மேகா டீன்ஏஜ் பருவத்தை எட்டியுள்ளதால், அவரை நாயகியாக அறிமுகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளாராம் இவர். ரஞ்சினியும், அவரது கணவரும் இணைந்து மகளுக்காக நல்ல கதையம்சம் கொண்ட இயக்குனர் மற்றும் ஹீரோவை தேடி வருகிறார்கள்.
ருத்ரமாதேவி என்ற திரைப்படத்தில் மேகா குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும், திருமணத்திற்கு இவருக்கு சினிமா, சின்னத்திரையில் நடிக்க பல வாய்ப்புகள் வந்தது. ஆனால், அதையெல்லாம் பல மறுத்து விட்டார். 21 ஆண்டுகளாக சினிமா பக்கமே வராமல் உள்ளார் நடிகை சிவரஞ்சனி. நீண்ட நாட்கள் சிவரஞ்சனி பற்றிய எந்த தகவலுமே தெரியாமல் இருந்தது.
இந்த நிலையில் திருமணமாகி 25 ஆண்டுகள் கழித்து நடிகை சிவரஞ்சனி தனது கணவரை விவாகரத்து செய்ய போவதாகவும் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பணப்பிரச்சனை தான் விவாகரத்துக்கு இடையே என்றும் சில தெலுங்கு யூடியூப் சேனலில் செய்திகள் வெளியாகியது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிவரஞ்சனியின் கணவர் ஸ்ரீகாந்த் தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து விளக்கமளித்த அவர் இதுபோன்ற வதந்திகளை பரப்புவது யார் என்றே தெரியவில்லை. பணச்சிக்கல் காரணமாக நாங்கள் விவாகரத்து செய்ய உள்ளதாக பொய் செய்தியை பரப்பி வருகின்றனர். உள்ளதாக எனது மனைவி வருத்தத்துடன் இந்த செய்தியை காட்டியபோது அதை சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று கூறி இருக்கிறேன். இதுபோன்று ஆதாரமற்ற செய்திகளை வெளியிட்ட ஊடகங்கள் மீது வழக்கு போடுவேன் என்று தெரிவித்துள்ளார்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.