சோபாவோட பிணத்தை கூட பாக்க முடியல.. நொந்து போய் கண்கலங்கிய மூத்த நடிகை..!

Author: Vignesh
6 July 2023, 4:30 pm

தமிழ் திரையுலகில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளை விடவும், அவர்களுக்கு துணையாக நடிக்கும் துணை கதாபாத்திரத்தில் நடிப்பவர்கள் அதிக ஸ்கோர் எடுத்து விடுவார்கள். அதனால் பல நடிகர் நடிகைகளை விட துணை நடிகர்களுக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைப்பது உண்டு.

ஒரு சில நடிகர்களுக்கு அந்த மாதிரி வாய்ப்பு கிடைக்காமல் போனதும் உண்டு. அந்த வகையில், சினிமாவில் பிளாக் அண்ட் ஒயிட் காலத்திலிருந்து இந்த காலம் வரை வெற்றிகரமாக தனது பயணத்தை தொடங்கி பழம் பெரும் நடிகையாக இருப்பவர் எஸ் என் பார்வதி தன்னுடைய சினிமா வாழ்க்கை குறித்து பேட்டி ஒன்றில் பகிர்ந்து உள்ளார்.

s n parvathy -updatenews360

என் எஸ் பார்வதி பல திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வந்த நிலையில், இப்போது சின்னத்திரையிலும் குணசேத்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், அவர் பசி திரைப்படத்தில் தன்னோடு நடித்த நடிகை சோபா பற்றியும் அவருடைய இழப்பால் தான் எந்த அளவிற்கு வருத்தப்பட்டேன் என்பது பற்றியும் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

s n parvathy -updatenews360

சினிமாவில் பல காலங்களாக நடித்து வரும் இவர் இவருடைய ஆரம்ப காலகட்டத்தில் வாய்ப்பு கிடைத்ததை விடவும், இப்போது அதிகமான வாய்ப்புகள் கிடைத்து வருகிறதாம். அந்த மாதிரி நேரத்தில் தான் இவருக்கு பசி படத்தில் நடித்து பிரபலமாக இருந்த நடிகை சோபாவுடன் நல்ல உறவு இருந்திருக்கிறது.

s n parvathy -updatenews360

மேலும், எஸ் என் பார்வதி பேசுகையில், சோபா தனக்கு மகள் போன்றவள் என்றும், அந்த அளவிற்கு தாங்கள் இருவர் இடையே இருந்த பழக்கம் இருந்ததாகவும், ஒரு நாள் தான் ஷூட்டிங்கில் இருந்தபோது சோபா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட செய்தி தனக்கு வந்ததாகவும், ஆனால் அப்போது படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த காரணத்தால் தன்னால் அந்த இறப்பிற்கு கூட செல்ல முடியவில்லை.

s n parvathy -updatenews360

கடைசி வரை அவருடைய முகத்தை கூட தன்னால் பார்க்க முடியாமல் போய்விட்டது என்று வருத்தத்துடன் பேசி இருந்தார். மேலும் ஷோபா தன்னிடம் மட்டுமல்லாமல் எல்லோரிடமும் அன்பாக இருக்கக்கூடிய நபர் என்றும், ஆனால் எதற்காக அவர் இந்த முடிவை எடுத்தார் என்பது தனக்கு இன்று வரை வேதனையாக இருப்பதாகவும், தன்னுடைய வருத்தத்தை அந்த வீடியோவில் எஸ் என் பார்வதி பகிர்ந்திருந்தார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி