மகளுக்காக நடிகை சினேகா எடுத்த திடீர் முடிவு : இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ..!

Author: Udayachandran RadhaKrishnan
25 January 2023, 3:59 pm

தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சினேகா. 90ஸ் கிட்ஸ்களின் பலரது கனவுக்கன்னியாக இருந்த இவர், இங்கனே ஒரு நிலபக்ஷி என்னும் மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர். இதனைத் தொடர்ந்து, என்னவளே படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயம் ஆனார்.

தெலுங்கில், பிரியமைனா நீக்கு என்னும் சூப்பர் ஹிட் படத்தின் மூலம் அறிமுகமான இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து வந்த இவர், ஒரு சில கன்னட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இப்படி 25திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர், சில நடன நிகழ்ச்சிகளுக்கு நடுவராக இருந்தும் வருகிறார்.

இதற்கிடையே, 2009ம் ஆண்டு பிரசன்னா உடன் இவர் நடித்த அச்சமுண்டு அச்சமுண்டு படத்தின் மூலம் இவர்களிடையே காதல் மலர, இருவீட்டாரின் சம்மதத்துடன், 2012ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தற்போது 1 மகளும் 1 மகனும் உள்ளனர்.

இருவருமே சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வரும் நிலையில், தங்களுடைய குழந்தைகள் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படம், வீடியோக்களை எல்லாம் சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்கள். இந்நிலையில், மகள் ஆத்யாந்தாவின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் உள்ள அரசு பள்ளிக் குழந்தைகளுக்கு விளையாட்டு பொருட்கள், உடைகள், இனிப்புகள், உணவு வழங்கி சினேகா & பிரசன்னா கொண்டாடினர். பள்ளிக் குழந்தைகளுடன் மகள் ஆத்யாந்தா விளையாடிய வீடியோ காட்சிகளை பிரசன்னா தமது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 393

    0

    0