சினேகா மகளா இது? அச்சு அசல் அம்மா மாதிரியே இருக்காங்களே.. லேட்டஸ்ட் போட்டோ இதோ..!

Author: Vignesh
24 January 2024, 3:01 pm

2000ம் காலகட்டத்தில் ஓஹோஹோன்னு புகழ் பாராட்டப்பட்ட நடிகையாக சினேகா தென்னிந்திய சினிமாவில் வலம் வந்தார். 2001 ஆம் ஆண்டு இங்கே ஒரு நீலப்பக்சி என்ற மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் 2001 ஆம் ஆண்டு என்னவளே திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

Sneha-Prasanna updatenews360

புன்னகை இளவரசி சினேகா, தமிழ் , தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வந்தார். இவரது குடும்பப் பாங்கான முகத்தோற்றத்துக்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவருக்கு பயங்கர ரசிகர்கள் உருவாகினர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த சினேகா 2009-ம் ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் பிரசன்னாவுடன் இணைந்து நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் உண்டானது.

sneha prasanna - updatenews360.jpg e

இந்த கோலிவுட்டில் பல தம்பதிகள், பெற்றோர்கள் சம்மத்ததுடன் இப்படி காதலித்து திருமணம் செய்தவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அதில் சினேகா மற்றும் பிரசன்னா கூட ஒரு முக்கியமான தம்பதியாக இருக்கிறார்கள். இவர்களுக்கு ஒரு ஆண் ஒரு பெண் குழந்தையும் பிறந்து வளர்ந்துவிட்டது.

sneha prasanna - updatenews360.jpg e

திருமணம், குழந்தை பிறப்பிற்கு பிறகு சில ஆண்டுகள் பிரேக் விட்டிருந்த சினேகா பின்னர் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். கிடைக்கும் ரோல்களில் நடித்து ஸ்கோர் செய்து வருகிறார். தற்போது தளபதி 68 படத்தில் முக்கிய ரோல் ஒன்றில் நடித்து வருகிறார்.

sneha - updatenews360

இந்நிலையில், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என கலக்கிய சினேகா திருமணத்திற்கு பிறகும் படங்கள் நடித்து வருகிறார். இப்படி நடிப்பு, தொலைக்காட்சி நிகழ்ச்சி, விளம்பரங்கள் என கலக்கிவரும் நடிகை சினேகா தனது மகன், மகளின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் பலரும், குழந்தையாக பார்த்த சினேகாவின் மகளா இது என கூறி வருகிறார்கள். ஏனென்றால் அந்த அளவிற்கு நன்றாக வளர்ந்துவிட்டார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 337

    0

    0