திருமணத்திற்கு முன் டேட்டிங் சென்ற சினேகா.. அதுவும் இவருடனா..? வைரல் புகைப்படம்..!

Author: Rajesh
3 May 2022, 4:42 pm

புன்னகை இளவரசி சினேகா, தமிழ் , தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வந்தார். இவரது குடும்பப் பாங்கான முகத்தோற்றத்துக்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவருக்கு பயங்கர ரசிகர்கள். 2001 ஆம் ஆண்டு என்னவளே திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த சினேகா 2009-ம் ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் பிரசன்னாவுடன் இணைந்து நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் உண்டானது.

இந்த கோலிவுட்டில் பல தம்பதிகள், பெற்றோர்கள் சம்மத்ததுடன் இப்படி காதலித்து திருமணம் செய்தவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அதில் சினேகா மற்றும் பிரசன்னா கூட ஒரு முக்கியமான தம்பதியாக இருக்கிறார்கள்.

இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்து வளர்ந்துவிட்டது. விளம்பரங்கள் மற்றும் குணச்சித்திர நடிகையாக நடித்து வந்தார். பிறகு நீண்ட நாட்கள் கழித்து தனுஷ் நடிப்பில் வெளிவந்த பட்டாசு திரைப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்திருந்தார்.

தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ள இவர் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் பிரசன்னா, சினேகாவை காதலிக்கும்போது முதல்முறையாக டேட்டிங் சென்ற புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டு உள்ளனர். அந்த புகைப்படத்தினை ரசிகர்கள் வைரலாக்கியுள்ளனர்.

  • Vishnu Make Scam for Soundariya winning in Bigg Boss சௌந்தர்யாவை ஜெயிக்க வைக்க காதலர் செய்யும் மிகப்பெரிய மோசடி : பரபரப்பு புகார்!