கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை சினேகா !!

Author: kavin kumar
30 August 2022, 4:15 pm

புன்னகை இளவரசி சினேகா, தமிழ் , தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வந்தார். இவரது குடும்பப் பாங்கான முகத்தோற்றத்துக்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவருக்கு பயங்கர ரசிகர்கள். 2001 ஆம் ஆண்டு என்னவளே திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த சினேகா 2009-ம் ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் பிரசன்னாவுடன் இணைந்து நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் உண்டானது.

இந்த கோலிவுட்டில் பல தம்பதிகள், பெற்றோர்கள் சம்மத்ததுடன் இப்படி காதலித்து திருமணம் செய்தவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அதில் சினேகா மற்றும் பிரசன்னா கூட ஒரு முக்கியமான தம்பதியாக இருக்கிறார்கள். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்து வளர்ந்துவிட்டது. விளம்பரங்கள் மற்றும் குணச்சித்திர நடிகையாக நடித்து வந்தார். பிறகு நீண்ட நாட்கள் கழித்து தனுஷ் நடிப்பில் வெளிவந்த பட்டாசு திரைப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்திருந்தார்.

தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ள இவர் அடிக்கடி தன்னுடைய போட்டோஷூட் புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் ஷேர் செய்வது வழக்கம் அந்த வகையில் தற்போது நடிகை சினேகா தனது கணவர் பிரசன்னாவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாவில் ஷேர் செய்து ரசிங்கர்களின் கவனத்தை ஈர்த்துளளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1279

    2

    4