“உங்க வீட்லயும் Ladies இருக்காங்க தானே”.. Adjustment – கேட்டா அது தான் நடக்கும்.. நடிகை சோனாவின் அதிரடி விளக்கம்…!

Author: Vignesh
27 December 2022, 7:15 pm

நடிகை சோனா ஒரு தமிழ் திரைப்பட நடிகை இவர் தமிழ், மலையாளம் , தெலுகு ,கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார் . நடிகை சோனா ஒரு கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடையே பிரபலமானவர். இவர் தமிழில் முதல் முதலில் அஜித் நடிப்பில் 2001 -ம் ஆண்டு வெளியான “பூவெல்லாம் உன் வாசம்” படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார்.

Sona-updatenews360-1-1

தமிழை தொடர்ந்து தெலுங்கு மலையாள சினிமாக்களில் நடித்து வந்தார். 2007ஆம் ஆண்டு வெளியான ” மிருகம் ” படத்தில் அந்த மாதிரிகவர்ச்சி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின்னர் 2008-ம் ஆண்டு ” பத்து பத்து ” படத்தில் மூலம் கவர்ச்சி கன்னியாக அவதாரமெடுத்தார் நடிகை சோனா. அதன் பின் நடித்த பல படங்களில் கவர்ச்சி வேடங்களிலும் ,காதபத்திரங்களிலுமே நடித்திருந்தார்.

இவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை கிடைத்த வாய்ப்புகளும் கவர்ச்சி கதாபாத்திரத்தில் தான் கிடைத்தது. மேலும், நடிகை சோனா கடைசியாக கடந்த 2018 -ம் ஆண்டு “பிரசாந்த்” நடிப்பில் வெளியான “ஜானி ” மற்றும் “விளம்பரம்” படத்தில் நடித்திருந்தார்.

sona-1-updatenews360

அதன் பின்னர் இவர் வேறு எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. பிறமொழி படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் நடிகை சோனா. நடிகை சோனா தற்போது தமிழில் கவர்ச்சி வேடங்களில் நடிக்காமல் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது, மீண்டும் கவர்ச்சி காட்டத் தொடங்கியுள்ள சோனா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட் ஆன புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை மீண்டும் சூடேற்றி வருகிறார்.

Sona-updatenews360-3

இந்த நிலையில், சமீபத்தில் நடிகை சோனா அளித்துள்ள பேட்டியில், எல்லாமே குடும்பத்திற்காகத்தான், நான் சினிமாவுக்கு வந்ததே எதர்ச்சியாக நடந்த சம்பவம் தான், படங்களில் நடிப்பேன் என்று எனக்குத் தெரியாது. நான் கூச்ச சுபாவம் கொண்டவள் என்பதால், எனக்கு ஆரம்பத்தில் சினிமாவில் நடிப்பதே பிடிக்கவில்லை. ஆனால், குடும்பம் கொஞ்சம் கஷ்டத்தில் இருந்ததால் நான் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்துவிட்டேன்.

ஆரம்பத்தில் நான் நடித்த படங்களில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை ரொம்ப நல்ல டீம். அதனால் தான் படங்களில் நடிக்க வேண்டும் என்று எனக்கு ஆர்வமே அதிகமானது.

Sona-updatenews360-3

ஆனால், அதன் பின் அட்ஜஸ்ட்மெண்ட்னு பேச்சு வந்ததால், கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட படங்களில் நடிக்க மறுத்துவிட்டேன். ஆனால், இப்போ வந்து யாராவது அட்ஜஸ்ட்மெண்ட்னு கேட்டா அடிதான். அட்ஜஸ்ட்மெண்ட்டிற்கு கூப்பிடுபவர்கள் வீட்லயும் பெண்கள் இருக்கிறார்கள் அதை மனதில் வைத்துக்கொண்டு நடந்து கொள்ளுங்கள் என்றார்.

  • Pushpa 2 Stampede CM Revanth Reddy Order to Tollywoodரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டியது பிரபலங்களின் பொறுப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு!
  • Views: - 502

    1

    0