பிரபல நடிகை திடீர் போராட்டம்.. சென்னை FEFSI அலுவலகம் முன்பு பரபரப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
24 March 2025, 1:10 pm

சென்னை வடபழனியில் உள்ள FEFSI அலுவலகம் முன்பு நடிகை திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகை சோனா. பூவெல்லாம் உன் வாசம் படத்தில் ஜோதிகாவின் தோழியாக நடித்தவர். நடிகை ஆகலாம் என்ற கனவோடு சினிமாவுக்கு நுழைந்த அவர், கவர்ச்சி நடிகையாக மாறினார்.

இதையும் படியுங்க : நீதிமன்றத்தை நாடிய ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி…தீர்ப்பு யாருக்கு சாதகம்.!

தனிப்பட்ட பல பிரச்சனைகளுக்கு பிறகு, சினிமாவில் கவர்ச்சியாக நடித்த அவருக்கு வாய்ப்புகள் அமையவில்லை. பல நடிகர்களால் பாதிக்கப்பட்ட விஷயங்களை அண்மையில் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் சோனா.

இந்தநிலையில் இன்று காலை வடபழனியில் உள்ள FEFSI அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார். தனது வாழ்க்கை வரலாற்றை தழுவி ஸ்மோக் என்ற வெப்சீரியஸை இயக்கியுள்ளார்.

இந்த படத்தை வெளியிட கூடாது என பலர் தன்னை மிரட்டுவதாகவும், நான் எடுத்த பயோபிக் படத்தின் ஹார்ட் டிஸகை எடுத்து வைத்துக் கொண்டு தர மறுக்கிறார்கள், என்னிடம் மேலாளராக பணியாற்றிய சங்கர் ரூ.8 லட்சம் வரை பண மோசடி செய்ததாகவும், இது குறித்து பெப்சியிடம் முறையிட்டேன்

Actress Sona Protest in FEFSI office

உதவுவதது போல ஃபெப்ஸி தற்போது கைவிரித்துள்ளதாகவும், அதனால் போராட்டத்தில் ஈடுபட்டேன். ‘ஹார்ட் டிஸ்க் கிடைக்கும் வரை இந்த இடத்தை விட்டு நகரமாட்டேன் என கூறியுள்ளார். சோனா ஏற்கனவே எடுத்த கனிமொழி படம் படுதோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

  • Bharathiraja son Manoj death பெரும் சோகத்தில் ‘பாரதிராஜா’ குடும்பம்…கண்ணீரில் திரையுலகம்.!
  • Leave a Reply