வடிவேலு கூட அப்படி ஆகிடுச்சு? மத்தவங்க இருந்ததுனால தப்பிச்சேன்- கவர்ச்சி நடிகை ஓபன் டாக்
Author: Prasad15 April 2025, 5:51 pm
வைகைப்புயல் மீது பிராது
வைகைப்புயல் என்று அழைக்கப்படும் காமெடி நடிகர் வடிவேலு கோலிவுட்டின் டாப் காமெடி நடிகராக வலம் வந்த நிலையில் சமீப காலமாக அவரை குறித்து அவருடன் நடித்த பலரும் அவர் மீது பல புகார்களை அடுக்கி வருகின்றனர். அதாவது வடிவேலு சக நடிகர்களை மதிக்க மாட்டார் எனவும் எவருக்கும் உதவி செய்யும் குணம் அவருக்கு இல்லை எனவும் பலர் கூறி வந்தனர்.

அதுமட்டுமல்லாது படப்பிடிப்புத் தளத்தில் அவருடன் நடிக்கும் ஜூனியர் நடிகர்கள் அவரை விட சிறப்பாக நடித்துவிட்டால் அந்த நடிகரை படத்தில் இருந்தே தூக்கிவிடுவார் என்றெல்லாம் அவர் மீது புகார் வைத்தனர்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட கவர்ச்சி நடிகை சோனா, வடிவேலுவுடன் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார்.
செட்டே ஆகல…
நடிகை சோனா ரஜினிகாந்தின் “குசேலன்” திரைப்படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அது குறித்து அப்பேட்டியில் பேசிய அவர், “குசேலன் படத்தில் நடித்தது எனக்கு நல்ல அனுபவம். ஆனால் படப்பிடிப்பில் வடிவேலுவுடன் எனக்கு தனிப்பட்ட முறையில் பல பிரச்சனைகள் வந்தது. எனக்கும் அவருக்கும் செட் ஏ ஆகவில்லை. எனினும் படக்குழுவினரிடம் இருந்து எனக்கு சப்போர்ட் இருந்தது. அதனால் அதில் தொடர்ந்து நடிக்க முடிந்தது. அந்த படத்தில் நடித்து முடித்த பிறகு காமெடி ரோலில் நடிக்க பல வாய்ப்புகள் வந்தன. ஆனால் அதனை மறுத்துவிட்டேன்” என அப்பேட்டியில் கூறியிருந்தார் சோனா.

நடிகை சோனா, “குசேலன்” திரைப்படத்தை தொடர்ந்து “அழகர் மலை” திரைப்படத்திலும் வடிவேலுவுடன் நடித்தார். இந்த இரண்டு திரைப்படங்களிலும் வடிவேலு-சோனா இடம்பெறும் காமெடி காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.
