கையில் சுருட்டுடன் வனிதா, சோனியா அகர்வால்.. கம் பேக் கொடுக்கும் நாயகிகள் வெளியான தண்டுபாளையம் ட்ரைலர்..!
Author: Vignesh23 May 2024, 1:47 pm
தமிழ் சினிமாவில் 2000ம் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்து வந்தவர் நடிகை சோனியா அகர்வால். பஞ்சாப் மாநிலத்தில் பிறந்து வளர்ந்த இவர் நடித்தது தமிழ் திரைப்படத்தில் தான். கோலிவுட் சினிமாவில் காதல் கொண்டேன் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்திய இயக்குனர் செல்வராகன் தான். அந்த படத்தில் இருவருக்கும் ஏற்பட்ட நெருக்கத்தால் காதலிக்க துவங்கினர். பின்னர் 2006ம் ஆண்டு பிரம்மாண்டமாக திருமணம் செய்துக்கொண்டனர்.
மேலும் படிக்க: ஆத்தாடி.. பிரியங்கா சோப்ரா கழுத்தில் இருக்கும் நெக்லஸின் மொத்த மதிப்பு எவ்வளவு தெரியுமா?
பின்னர், இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து கொண்டனர். மேலும், இவர் நடித்த காதல் கொண்டேன், கோவில், மதுர, 7 ஜி ரெயின்போ காலணி, திருட்டுப்பயலே ஆகிய திரைப்படங்கள் பெரும் வெற்றியை தந்தன. சமீபத்தில் பிரபுதேவாவின் பாஹிரா என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்.
மேலும் படிக்க: பிரபல MLAவுடன் இரண்டாம் திருமணம்?.. வெளிப்படையாக பேசிய ரேகா நாயர்..!
இந்நிலையில், தற்போது மீண்டும் சினிமாவிற்குள் நுழைந்த சோனியாகவால் தண்டுபாளையம் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், ட்ரைலர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும், இதில் நடிகை வனிதாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் வெளியாகி வருகிறது. மரண மாஸ் ரசிகர்களுக்கு மட்டுமே என்ற டேக்லைனுடன் தண்டுபாளையம் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.