அச்சு அசல் மறைந்த நடிகை சௌந்தர்யா மாதிரியே இருக்காங்க.. போட்டோ பார்த்து ரசிகர்கள் ஷாக்..!

Author: Udayachandran RadhaKrishnan
29 January 2023, 1:30 pm

90ஸ் காலகட்டத்தில் ரசிகர்கள் மனதில் கனவு கன்னியாக தென்னிந்திய திரையுலகில் வலம் வந்தவர் நடிகை சௌந்தர்யா. இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான ரஜினிகாந்த், கமல், கார்த்தி, விஜயகாந்த் உள்ளிட்ட பலருடன் இணைந்து நடித்துள்ளார்.

பொன்மணி, படையப்பா, அருணாச்சலம், தவசி, காதலா காதலா என இவர் நடிப்பில் வெளியான படங்களில் இவரது நடிப்பு இன்றும் புகழ்ந்து பேசப்பட்டு வருகிறது. தொடர்ந்து தென்னிந்திய சினிமாவில் பிஸியாக பல படங்களில் நடித்து வந்த நடிகை சௌந்தர்யா, 2004ம் ஆண்டு விமான விபத்தில் சிக்கி மரணமடைந்தார்.

இவருடைய மரணம் தமிழ் சினிமாவிற்கு மிகப்பெரிய இழப்பையும் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் ஏற்பத்தியது. இந்நிலையில், அச்சு அசல் நடிகை சௌந்தர்யா போலவே இருக்கும் பெண் ஒருவரின் புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும், ஷாக்காகியுள்ளனர்.

  • Khalid Rahman, filmmaker Ashraf Hamsa arrested for cannabis possession in Kochi கஞ்சா வைத்திருந்த பிரபல சினிமா இயக்குநர்கள்..வளைத்து வைளத்து கைது செய்யும் போலீசார்!