வாங்க ஏற்காடு போலாம்..அட்ஜஸ்மெண்டால் சினிமாவை விட்டு விலகிய நடிகை.!

Author: Selvan
16 February 2025, 11:12 am

அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனையால் மனம் உடைந்த நடிகை

சினிமாவில் காலம் காலமாக நடிகைகளுக்கு அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருந்து கொண்டு தான் வருகிறது,சில நடிகைகள் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்னையை தைரியமாக எதிர்கொண்டு,அந்த படத்தில் நடிக்க மறுத்தும் வருகிறார்.

இதையும் படியுங்க: பெரும் சோகம்…பரிதாப நிலையில் லொள்ளு சபா காமெடி நடிகர்..!

அந்த வகையில் பிரபல யூடியூப் சேனலுக்கு நடிகை காயத்ரி ரேமா பேட்டி ஒன்று அளித்துள்ளார்,அதில் தனக்கு நேர்ந்த அட்ஜஸ்ட்மென்ட் பிரச்னையால் என்னுடைய சினிமா வாழ்க்கையை நாசமாக போய்விட்ட்டது,இதனால் நான் நடிப்பதையே நிறுத்திவிட்டேன் என மனம் திறந்து பேசியுள்ளார்.

Gayathri Rema Interview on Film Industry

டூரிங் டாக்கீஸ் திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆன காயத்ரி ரேமா,தொடர்ந்து பல சிறிய பட்ஜெட் படங்களில் நடித்து வந்தார்.முந்தய காலத்தில் தயாரிப்பாளர்கள் ஹீரோ ஹீரோயினுக்கு சம்பளத்தை கொடுத்தோமா,அவர்கள் வேலையை மட்டும் பார்த்து விட்டு செல்வார்கள்,அதனால் நடிகர் நடிகைகள் எல்லாம் தயாரிப்பாளர்களை முதலாளிகள் என அழைப்பார்கள்,ஆனால் இப்போது அப்படியில்லை பெரும்பாலான தயாரிப்பாளர்கள் நடிகைகளுக்கு அப்பா வயதில் இருக்கிறார்கள்,அப்படி இருக்கும் பட்சத்தில் அவர்கள் நடிகைகளிடம் அட்ஜஸ்ட்மென்ட்எதிர்பார்க்கிறார்கள் என கூறியிருப்பார்.

மேலும் என்னையும் பல முறை அழைத்துள்ளார்கள்,ஒரு முறை பிரபல நடிகரின் படத்தில் நடிக்க அவரிடம் வாய்ப்பு தேடி சென்றேன்,அந்த நடிகரும் ஓகே சொல்லிவிட்டார்,ஆனால் இரண்டு நாட்களுக்கு பிறகு என்னிடம் ஏற்காடுக்கு போகலாமா என்று கேட்டார்,நான் உடனே உங்கள் மனைவியை அழைத்து செல்லுங்கள் என்று போனை கட் செய்து,அந்த படத்தில் நடிக்கவும் மறுத்துவிட்டேன்,எனக்கு நடந்த அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனையால் என்னால் சினிமாவில் பெரிதாக ஜொலிக்க முடியவில்லை,என அந்த பேட்டியில் காயத்ரி ரேமா தெரிவித்திருப்பார்.

  • Famous director dies suddenly… Film industry in shock பிரபல இயக்குநர் திடீர் மரணம்… திரையுலகம் ஷாக் : தயாரிப்பாளர் கண்ணீர் பதிவு!